காதல்-----------------
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡♡♡ காதல் ♡♡♡
●●●●●●●
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ அது
உனக்கும் எனக்குமான
ஆயுளின் சந்திப்பு !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ எங்கோ
கிடந்து கண்டு பிடித்த
அன்புப் புதையல் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ ஒரு
தெய்வீக மணம் வீசும்
இறை அனுபவம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ மிட்டாய் கேட்டு
அழும் குழந்தைகளின்
குதூகலம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ காலமாகாத
ஓர் உன்னதமான
உயிர் இருப்பு !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ சொற்களால்
பொருள் கொள்ள இயலாத
ஓர் உணர்வு !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ அது
மரணமறியாத தனிச்சிறப்பு
சிருஷ்டிப்பு !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ பொங்கி
பிரவாகித்து கொல்லும்
ஓர் இன்ப ஒளி !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ ஒரு
முழு நிலவு முறுவலில்
குளிர்த்தும் தென்றல் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ வாழ்வை
அர்த்திக்கும் ஆனந்தத்தின்
மலையருவி !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ திகட்டும்
தேன் சுவை மிகுந்த
தணியாத கிறக்கம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ ஒரு
பேரமைதி தாங்கிய
ஆழ்கடல் நீரோட்டம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ ஏகாந்த
பெருவெளியின்
செயற்பாட்டுப் பணியகம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ அது
அர்த்தப் படும் வாழ்வியலின்
அளவீடற்ற செல்வம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ காதலில் மௌனம்
பல அற்புத மொழிகளில்
பேசி உச்சரிக்கும் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ காதலில் ஊறிய
உள்ளம் காயாது கனியாது
பிய்ந்தழியும் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ காதலை அந்த
காதலைத் தவிர
வேறெதாலும் அறிய முடியாது !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- பிரியத்தமிழ் -