சு.அய்யப்பன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சு.அய்யப்பன் |
இடம் | : கோவில்பட்டி |
பிறந்த தேதி | : 29-Oct-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1757 |
புள்ளி | : 730 |
பாரதியால் எழுத வந்தேன்rnகண்ணதாசனின் பாடலில் லயிப்பேன்rnகாவியக்கவிஞரின் வாழ்த்தைப் பெற்றேன்
வேகாமா தாவா விணைமெய் யரலளழ
வாகாக கையிருக்கும் வண்ணமாம்;- ஆகமத்தான்
பேராம் பணிந்திடுவோம் பீடுபுகழ் சேர்ந்திட
சீராக வாழ்வோம் சிறந்து
செய்யுளில் முதல் இரு சீரின் ஒவ்வொரு எழுத்தும் முறையே யரலளழ மெய்யெழுத்தாகக் கொண்டு இணைத்துப் பின் வருமாறு பொருள்கொள்க
கையிருக்கும் வேய்- புல்லங்குழல்
வண்ணம் -கார்
ஆகமத்தான் பேராம்- மால்
பணிந்திடுவோம்- தாள்
பீடுபுகழ் சேர்ந்திட- வாழ்
மறைகாக்க மீனம் மலைதாங்க வாமை
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்
அறங்காக்கக் கோடரியன் கண்ணனண்ணன் ராமன்
நெறிகாக்கும் கல்கி நினை
மறை காக்க வேதத்தைக் காக்க மீனம்
மலையைத்தாங்க ஆமை
பொறை என்பது இங்கு பூமி எனக்கொள்க
பொறைகாக்க வேனநர சிம்மம் ;- குறளோன்
ஏனம் வராகம்
குறளோன் வாமனன்
கண்ணன் அண்ணன் இது கண்ணனையும் கண்ணனின் அண்ணன் பல ராமனையும் குறிக்கும்
ஒரே யுகத்தில் இரு அவதாரம் ஒரேசொல்லில் இரு அவதாரமும்
கோடரியன் பரசு ராமன்
தமிழ்பிறந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் தமிழ்பிறந்ததா(ம்)?!
ஒலிபிறந்ததால் மொழிபிறந்ததா(ம்)?!
மொழிபிறந்ததால் ஒலிபிறந்ததா(ம்)?! (தமிழ்)
அடியளந்துதான் கவிபிறந்ததா(ம்)?!
கவிபிறந்துதான் அடியளந்ததா(ம்)?!
எழுத்துவந்துதான் பொழுதளந்ததா(ம்)?!
பொழுதளந்துதான் எழுத்துவந்ததா(ம்)?! (தமிழ்)
ஆசைவந்ததால் ஓசைவந்ததாம்!
ஓசைவந்ததால் வாசிஎன்றதாம்
வாசிஎன்றதால் வாசிக்கின்றதாம்
வாசிக்கின்றதால் சுவாசிஎன்றதாம் (தமிழ்)
உயிர்மெய் இணைந்ததால் உயிர்மெய் வந்ததாம்!?
உயிர்மெய்வந்ததால் உயிர்ப்புவந்ததாம்
இயலெழுந்ததால் இசைபிறந்ததா(ம்)?!
இசைபிறந்ததால் இயலெழுந்ததா(ம்)?! (தமிழ்)
எழுத்துவந்ததால் வார்த்தைவந்ததாம்
நெஞ்சம் பாடலகளால் நிறையும் பாடு
பிஞ்சுப் பாதங்களால் நிறையும் வீடு
புள்ளிக் கோலங்களால் நிறையும் வாசல்
பிள்ளைப் பாதங்களால் நிறையும் வீடு
நேர காலங்களால் நிறையும் நாள்கள்
வார மாதங்களால் நிறையும் ஆண்டு
வீரர் தியாகங்களால் நிறையும் நாடு
பேரப் பிள்ளைகளால் நிறையும் வீடு
கெஞ்சும் ஊடல்களால் நிறையும் கூடல்
கொஞ்சும் கூடல்களால் நிறையும் காதல்
வெல்லும் எழுத்துக்களால் நிறையும் வார்த்தை
சொல்லும் வார்த்தைகளால் நிறையும் பாடல்
செய்யும் வாதங்களால் நிறையும் ஞாயம்
வைய ஞாயங்களால் நிறையும் நீதி
பாச பந்தங்களால் நிறையும் சொந்தம்
ஓசை சந்தங்களால் நிறையும் சிந்தும்
மான்நாணும் மீன்நாணும் மஞ்ஞை மனம்நாணும்
மான்நாணு முன்முன்ன மன்னமே:- நூன்நாணும்
மின்னுமுன் மின்நாணும் மென்னன்ன மும்நாணு(ம்)
மென்மன மென்னாம் நினை?
மானும் மீனும் உன் கண்காண நாணும்
ஆம் அந்த மன்மதனின் கொடியாம் மீனும் அவன் உலாவரும் மானும் நாணும்
ஏன் ஏன் மன்மதனே நாணும் முருகு வாகனமாம்
மஞ்ஞை-மயிலும் நாணும்
மான் மையலும் நாணும்,
நூல் ஆம் இடை என்னும் நூலின் முன்னே மின்னுவதற்கு முன்னே மின்னல் நாணும் மின்னியதும் இவள் இடைக்கு இணையாக மாட்டோம் என்றுதான் ஒளிந்து கொள்கிறதோ என்னவோ..?
மென்னடை அன்னமும் நாணுமென்றால்
என் மனம் என்னாகும் இதை நினைத்துப் பார்த்தாயா பெண்ணே...
உன்னைப் பாடும் போது எ
மான்நாணும் மீன்நாணும் மஞ்ஞை மனம்நாணும்
மான்நாணு முன்முன்ன மன்னமே:- நூன்நாணும்
மின்னுமுன் மின்நாணும் மென்னன்ன மும்நாணு(ம்)
மென்மன மென்னாம் நினை?
மானும் மீனும் உன் கண்காண நாணும்
ஆம் அந்த மன்மதனின் கொடியாம் மீனும் அவன் உலாவரும் மானும் நாணும்
ஏன் ஏன் மன்மதனே நாணும் முருகு வாகனமாம்
மஞ்ஞை-மயிலும் நாணும்
மான் மையலும் நாணும்,
நூல் ஆம் இடை என்னும் நூலின் முன்னே மின்னுவதற்கு முன்னே மின்னல் நாணும் மின்னியதும் இவள் இடைக்கு இணையாக மாட்டோம் என்றுதான் ஒளிந்து கொள்கிறதோ என்னவோ..?
மென்னடை அன்னமும் நாணுமென்றால்
என் மனம் என்னாகும் இதை நினைத்துப் பார்த்தாயா பெண்ணே...
உன்னைப் பாடும் போது எ
காற்றை இசையாக மீட்டும்;- குழல்
கற்றது கையளவு காட்டும்
காற்றது கையளவில் தேனாம்;- நாம்
கற்றது கையளவு தானா(ம்)?
புல்லும் குழலாகப் பாடும் – மின்னும்
பொன்னும் அணியாகக் கூடும்
கல்லும் சிலையாக மாறும்;- நாம்
கற்றது கையளவு கூறும்
மண்ணே குடமாய்நீர் முகக்கும்;-அந்த
மண்ணே கடமாகி ஒலிக்கும்
கண்ணைக் கவரும்படம் சிரிக்கும்;- நாம்
கற்றது கையளவு குறிக்கும்
காணுஞ் செவிகேளார் மொழியாம்;- சைகைக்
கற்றது கையளவு வழியாம்
காண விழியில்லா நிலையில்;- தொட்டுக்
கற்றது கைஅளவு மொழியில்
கன்னி இடைஎன்ன கொடியோ?- அந்தக்
காமன் மதனேற்றுங் கொடியோ
கன்னி இடைஎன்கைப் பிடியில்;- சுகம்
கற்றது கையளவுப் பிடியில்
நூலால் அறிவ
முப்பது சுன்னங்கள் முன்னொன்றைத் தானெழுதி
எப்படிச் சொல்வீர் இயம்பென்றாள் - இப்பாரில்
எந்த மொழிசொல்லும்? எங்கள் மொழிசொல்லும்
பைந்தமிழ்ப் பூரியே பார்
1000,000,000,000,000,000,000,000,000,000-பூரி
கற்குந் தமிழ்வழிக் கல்வி தரு(ம்)மேன்மை
கற்குந் தமிழ்வழிக் கல்விதர - நிற்குமே
பாரிரு நூற்றுப் பதினா றடியுயர்ந்து
தாரணியும் தஞ்சைத் தமிழ்
தாரணியும் = தார் அணியும் என்றும் தாரணியும் என்றும் பொருள் கொள்க
கற்கும் தமிழ்வழிக் கல்விதர- கல்லுக்கும் தமிழ்வழிக் கல்விதர அதாவது உயிர் எழுத்துக்கள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18ம் சேர்ந்து 216
உயிர்மெய்யெழுத்துக்கள் அந்த 216 அடி உயரத்திற்கு கல்லை அடுக்கிக் கட்டிய தஞ்சைக் கோபுரம் நிழல் காட்டாது அதிசயம் தானே
எழுத்துக்கள் எண்ணிக்கையில் அமைத்த கல்லே உலக அதிசயம் ஆனால்...
நீயும் தமிழ் வழிக் கல்வி பயின்று பார் தெரியும் சரிதானே
நெல்லையில் கோயிலில் நீவிடும் மூச்செண்ணி
கல்லை துளையிட்டார் கண்டீரோ - தில்லையின்
அம்பலமே லோடுகளும் அந்தக் கணக்கென்றால்
அம்பல மாமே அறி(வு)
................................................................................................
நாம் நிமிடத்திற்கு 15 சுவாசம் விடுகின்றோம்
மணிக்கு=60x 15=900
நாளொன்றிகு 900x 24 = 21600
ஆக இந்த கணக்கில் நெல்லையப்பர் கோயிலில் சுவரில் 21600 துளைகள் உள்ளன அதே போன்றே சிதம்பரத்திலும் அதன் மேற்கூரை ஓடுகள் உள்ளன.
விஞ்ஞானத்தை அன்றே நம் மெய்ஞானம் காட்டிற்று அல்லவா.
அம்பலம் என்பது கோயிலையும், அம்பலமானதையும் சிலேடையாக அமைத்துள்ளேன்.
1. 2 சொற்கள் 30 வரிகள்
2. 12.7.2014 இரவு 12.00.00 மணிமுதல் 13.7.2014 இரவு 11.59.59 மணி வரை மட்டுமே படைப்புகள் தளத்தில் இப்பகுதியில் மட்டும் பதியலாம் பதிவிடும் படைப்புகள் கருத்துக்கள் அனைத்தும் இந்திய நேரப்படியே இங்கு பதிவாகின்றது...!! எனவே வெளிநாடு வாழ் நம் தோழர்கள் அனைவரும் அவரவர் நாட்டின் நேர அளவு வித்தியாசங்களுக்கு தக்கவாறு இந்திய நேரப்படி தங்கள் படைப்புகளை பதிவேற்றலாம்.தனி விடுகையில் அளிப்பவை ஏற்க இயலாது
3 ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அளிக்கலாம்
4. பிறமொழி கலப்பு மற்றும் பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைக்கும்
5. மரபுக் கவிதை எனில் பா வகைமையைக் குறித்தல் வேண்டும்
6.படைப்புகள் மீதான கர
1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்
நண்பர்கள் (71)

மு கா ஷாபி அக்தர்
பூவிருந்தவல்லி , சென்னை .

ப திலீபன்
பெங்களூரு

முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்
விக்கிரவாண்டி

கோபிநாதன் பச்சையப்பன்
Qatar
