பாதங்களால் நிறையும் வீடு

நெஞ்சம் பாடலகளால் நிறையும் பாடு
பிஞ்சுப் பாதங்களால் நிறையும் வீடு
புள்ளிக் கோலங்களால் நிறையும் வாசல்
பிள்ளைப் பாதங்களால் நிறையும் வீடு

நேர காலங்களால் நிறையும் நாள்கள்
வார மாதங்களால் நிறையும் ஆண்டு
வீரர் தியாகங்களால் நிறையும் நாடு
பேரப் பிள்ளைகளால் நிறையும் வீடு

கெஞ்சும் ஊடல்களால் நிறையும் கூடல்
கொஞ்சும் கூடல்களால் நிறையும் காதல்
வெல்லும் எழுத்துக்களால் நிறையும் வார்த்தை
சொல்லும் வார்த்தைகளால் நிறையும் பாடல்
செய்யும் வாதங்களால் நிறையும் ஞாயம்
வைய ஞாயங்களால் நிறையும் நீதி
பாச பந்தங்களால் நிறையும் சொந்தம்
ஓசை சந்தங்களால் நிறையும் சிந்தும்

எழுதியவர் : சு.ஐயப்பன் (3-Nov-18, 6:29 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 1582

மேலே