Kaalam untran pinnal
ஏர்கலப்பை தூக்கி உழுதவனே
உலகுக்கு உணவிட்டவனே!!
கடன் பெற்றது காலசூழ்நிலை....!!!
மாற்றம் பெற்ற காலம்
தந்த பரிசு....!!!
ஆசையாய் கட்டிய வீட்டுமனை விற்பனை...!!!!!!
கல்யாண மண்டபங்கள் காத்திருக்க.
முதிர்கன்னிக்கு உறவுகள் கூறியது
"காலம்" வரும் காத்திரு...!!!
காலத்தின் கணிப்பே மாறியது
அனைவருக்கும்...
காலதேவனை கேட்டேன்!! அவனோ!!
தோழா!!!!!
வெற்றியை தருவது பிறந்தநேரமல்ல....!
பயன்படுத்தப்படும் நேரம்...!!!
முழுமையாய் என்னை ஈர்த்தவனே!!
வெற்றியாளன்..!!!!
லட்சிய பாதையை உருவாக்கடா..!!
நதிபோல ஓடிவாடா என்னுடன்..
வெற்றிக்கனியை பறிக்க....
திட்டமிடுடா மானிடா...!!
தீட்டியதை செயல்படுத்தடா...!
செயலில் வேகம் பிறக்குமடா....!!!!
வேகத்தில் விவேகமிருக்கும்டா..!!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வாழ்க்கை ஒரு சிறுபயணம்
சிறுபயணத்தில்........
எத்தனை எத்தனை கனவுகள்!!!!
வாழ்க்கை கனவுக்கான மட்டுமல்ல
நனவாக்க!!! என்பதை உணர்..!!!
பெரியமுள் கடந்த ஒவ்வொரு மணித்துளியும்
இறுதிக்காலத்தில் வசந்தகாலமாக
சின்னமுள் நகரும் இடைவெளியை
வீணாக்காதே தோழா.....!!!!!
நான் தருவது
தோல்வியல்லடா!!
அனுபவம் என கருது....
ஆசானாக உயர்வாய்!!!
கண்ணாடிக்கூட்டுக்குள்
முட்கள் அல்ல நாங்கள்!!!
கல்யாண ஜோடிகளும்
12 பிள்ளைகளுமாக
எங்களை நண்பனாக்கு!!!!
வெட்டி அரட்டை அடிக்க இல்லையடா
வெற்றியை அதர வைக்க!!!!
சந்திக்கும் வேளையில்
சிந்தித்துப்பார்!!
உலகமே உன்னை திரும்பி பார்க்கும்
காலதேவனை வணங்கி
கண் விழித்தேன்......
விழித்தது கண்மட்டுமல்ல
உணர்வுகளும் தான்.....!!!!!
சிந்தித்தேன்......
புதிய பாதை உருவானது......
செயல்பட்டேன்......
முதல் தடம் பதிந்தது...!!!!
தோழா!!!!!!
உலகில் எதுவும் நிலையில்லை
மாற்றம் மட்டுமே நிலையானது....
மாற்றத்தோடு நீயும் பயணி!!!
காலம் உன்றன் பின்னால்
துணையாக....!!!!