கவிதை

கவிஞன் நெல்கொண்டு
விதைக்காது சொல்கொண்டு
விதைக்கும் விதை கவிதை

சமூகத்தை மாற்ற அவன்
நாவால் பாவால் சொல்லும்
கதை கவிதை

உடமைகளைச் சுமப்பது கழுதை
உவமையினைச் சுமப்பது கவிதை

கருத்து எனும் மூலப்பொருள் கொண்டு மூளை எனும் கனவுத்
தொழிற்சாலையில் சொல் எனும் தறியில் நெய்யப்பட்டு நடை எனும் கடையில் தமிழ் மகள் உடுத்த விற்கப்படும் ஆடை கவிதை

மந்தியைப்போல் கற்பனை தாவுவதால் இதற்கும் கவி என்றே பெயர்

கிழிந்த சமூக அவலத்தை
சொல் எனும் நூல்கொண்டு
தைப்பது கவிதை

கவிதை
வள்ளுவன் விதைத்த மரம்
நீர் ஊற்றியதோ கம்பனின் கரம்
ஊட்டம் தந்தது கபிலனின் உரம்
பெண்ணடிமை வேரறுக்க பாரதி
பெற்ற அரம்
பாரதிதாசன் கற்ற அறம்
கலைமகளின் சிரம்

மூடர்களை சமத்துவம் எனும்
சிலுவையில் அறைய எழுத்தாணி
கொண்டு உருவாக்கிய எழுத்து ஆணித்தான் கவிதை

புதுவைக் குமார்

உதவி மேலாளர்
கூட்டுறவு பால் நிறுவனம்
புதுச்சேரி

எழுதியவர் : குமார் (4-Nov-18, 11:38 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kavithai
பார்வை : 237

மேலே