கனவே கரையாதே
கனவே நீ
காற்றில் கரைந்து
போகாதே !!!!!!
எண்ணிலடங்கா
ஏட்டிலடங்கா
சொல்லிலடங்கா
சொப்பனங்கள் !!!!!!
மனித கூடுக்குள்
மாறா சிந்தனைகள்
காற்றை அடைத்துவிட்டு
உயிர் வலியுடன்
ஊசலாடும் கனவுகள் !!!!!!
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடியபடி நாளும்
அரையாடை மனிதர்களாய்
சிலந்தி வலையில்
சிக்கியபடி!!!!!
வியர்வைதுளிகளை
விதைகளாக்கி
விளைச்சல் கண்டு
அறுவடைக்கு
காத்திருக்கிறோம்!!!!!!
அவன் வருவானா
இவன் வருவானா
எவன் வருவான்
எமை காக்க
எமனே நீயாவது வருவாயா!!!!!