சுகமான சுமைகள்
வாழ்க்கை எனும் ஓடம்
அது செல்லுகின்ற வேகம்
தாங்குகின்ற சுமைகள்
என்னென்பது ஏடு தாங்காது
ஆயினும் ஆண்டவன் கையில்
எல்லாம் வல்ல அவனிடமே
நேர்மையும் நன்மையும் உண்மையும்
எங்கேயோ சுகமான சுமைகள்
வாழ்க்கையின் இனிதான சுமைகளே
அழகிய வாழ்வின் அளவில்லா மகிமை
அனுபவிக்க தெரிந்தால் அற்புதம்
வாழ்கை இலகுவானது இன்பமயமானது
புரிந்து வாழ பழகி கொள்வோம்
புத்துணர்வோடு புதிதாய்