மண் குதிரை

"பதவி" என்னும்
குதிரையில் அமர்ந்து
பணிவாக பயணம் செய்யாமல் அகம்பாவத்துடன்
பயணம் செய்தவனை
குதிரை கீழே தள்ளியது

மண்ணிலே வீழ்ந்தவன் எழுந்தான்
மீசையில் மண் ஓட்டவில்லையென்று
மார்தட்டிக் கொண்டு
மண் குதிரை மீது அமர்ந்து
மீண்டும் பயணம் செய்ய
தயாராகி விட்டான்.
கால வெள்ளத்தில்
கரை ஏறுவது கடினமே....!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Dec-24, 12:52 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : man kuthirai
பார்வை : 79

மேலே