உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

நிமிடத்து நிமிடம்
மாறி கொண்டேதான்
இருக்கிறது

விழி ஓரத்தில்
நீர் கசிய பார்த்து
வந்த சோக
படமொன்றோ
நிகழ்வொன்றோ
பார்த்து வெளியே
வந்தபின்

அடிவயிறு
கிளப்பிய பசி
தீயில்
உக்கிரம் ஒன்று
மனதுக்குள் வந்து
உட்கார்ந்து விடுகிறது
பார்ப்பது எல்லாம்
எரிச்சலாய்..!

வயிற்றில் விழுந்த
ஆகாரம்
பசி
தீயை அணைத்த
பின்னால்

ஏதோ ஒரு
மகிழ்ச்சி மனதுக்குள்
திரும்பத்தான்
வந்து விடுகிறது

இது போல காதலும்
காமமும் கூட

இப்படி ஒவ்வொன்றை
பார்த்த பின்பு
மாறி மாறி
தோன்றும் உணர்ச்சிகள்

காட்சிகள் நிகழ்வுகள்
சாட்சிகளாய்
எண்ண கடலுக்குள்
அன்றாடம்
உணர்ச்சி அலைகளாய்
கரை வந்து கரை வந்து
திரும்பி சென்று
கொண்டே இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Dec-24, 2:57 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : unarchchikal
பார்வை : 45

மேலே