மனம் ஒரு கண்ணாடியே
மனம் ஒரு கண்ணாடியே..!
13 / 12 / 2024
நம் மனம்
தொடக்கத்தில் வெளிப்படையாக
மற்றவர் குற்றம் குறைகளை மட்டும்
காண்பிக்கும் கண்ணாடியாய்
இருக்கும் - பின்
வயது..அறிவு ..அனுபவம்
இன்னும்பல ரசங்கள் பூசப்பட
நம்மையே நமக்கு
தோலுரித்துக் காட்டிடுமே - நம் மனம்
ஒரு கண்ணாடியே..! அதுவும்
காலக் கண்ணாடியே. - ஆம்
காலம் கூடக்கூட
நாம் யார் என நமக்கு
காட்டிக் கொடுத்துவிடுமே..!