பின்னும் நீ இன்னும் வரவில்லை என்று நானும்
வாடிக் கிடந்த மலர்த்தோட்டம்
தென்றல் வரக் காத்திருக்க
மூடிக் கிடக்கும் பூ மொட்டுகளும்
நம்பிக்கையில் பார்த்திருக்க
பாடித் திரியும் குயில்கள்
வசந்தத்தை வரவேற்க காத்திருக்க
தேய்ந்தாலும் தவறாது வந்துவிட்ட
நிலவும் வானில் காத்திருக்க
பின்னும் நீ இன்னும்
வரவில்லை என்று நானும் ....