அயல்நாட்டு வேலையும் வளவாழ்வுக் கனவுகளும்

அலைகடல் கடந்தங்கு விரிநிலம் செழித்திட
ஆற்றாதுய ரடக்கிப் பிரிநிலை தானேற்று
இன்பவாழ் வதனின் எண்ணம் அகம்நிறுத்தி
ஈரவிழிகள் வற்றும்முன் விடைப்பெற்று இடமகன்று
உயிரெனத் திகழ்காதல் நினைவலைகள் உளங்கொண்டு
ஊரார் வாழ்த்துரைகள் விழைவுகள் செவிமடுத்து
எதிர்படு தடையாவும் உறுதி யுடன்வென்று
ஏற்றம் தன்வாழ்வு தன்இல்லம் தன்குடிக்கு
ஐயங்கள் அகம்நிறைந்தினும் நம்பிக்கை உளம்நிறுத்தி
ஒருபடு திறம்கொண்டு உழைப்பதனைச் செயலாக்கி
ஓர்நொடி தளர்வடையா உறங்கா விழிமூட
ஒளடதம் நமக்கிங்கு வளவாழ்வுக் கனவுகளே

எழுதியவர் : பாலகிருஷ்ணன் (4-Nov-18, 7:17 pm)
சேர்த்தது : வை ச பாலகிருஷ்ணன்
பார்வை : 94

மேலே