மெல்ல விரிந்திடும் மார்கழி வெண்பூவே

மெல்ல விரிந்திடும் மார்கழி வெண்பூவே
சில்லென்ற காற்று குளிருதோ காலையில்
முல்லையும் தோற்கும் முழுநிலா வெண்பனியில்
சில்லென்ற நீரினில் காலையில் நீராடி
நல்லாடை தன்னில் நயனமெனும் மீனாட
செல்கிறாள்பார் ஆலயம் செவ்வானம் வாழ்த்திட
கொல்லெனநீ பூத்துச் சிரி

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-24, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

மேலே