Balakrishnan VS - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Balakrishnan VS
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  27-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2018
பார்த்தவர்கள்:  206
புள்ளி:  9

என் படைப்புகள்
Balakrishnan VS செய்திகள்
Balakrishnan VS - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 6:10 pm

ஆங்கே விரிகடல் மேல்பரப்பு வீசு வெள்ளலை
திரண்டு உயரெழ நிலைகெடும் மரக்கப்பல்
தன்னுள் உறைபொருள் மக்கள் யாவர்நலம்
பிழையின்றித் தான்காத்துப் பேரிடர் உடன்தவிர்க்கும்
ஈண்டு ஆழ்கடல் நீருலகில் ஆயிரம் எழில்மீன்கள்
சூழ்ந்தமையச் சுற்றத்துடன் வாழ்எம் வீடதனில்
பசியுணர்வு அகம்நிறைக்க உயிர்நேயம் உணர்வகல
ஊனுண் விருப்புற்றுக் கூர்வேல் கரம்வீச
உடல்கிழிய வழிகுருதி நீர்க்கலந்து சிவந்தமைய
நான்படும் பெரும்பாடு கடல்ஆழத்தில் மறைந்தொழிய
நிலம்வாழ்வோர் தம்வாழ்வை இடரின்றித் தாம்தொடர
அழிவின் விளிம்பதனில் தவிப்புடனே நாள்கடத்தும்
எம்மினத்தோர் உய்வடையக் கலமொன்றுத் தருவீரே

மேலும்

Balakrishnan VS - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2019 10:40 pm

நாசுழற்றி வாய்திறந்து முதற்சொல் மொழிதினம்முதல்
தோள்கனக்கப் பொதிசுமந்து ஏடெடுத்துக் கலைபயின்று
நாள்தோறும் வீடுமுதல் பள்ளிவரை வழிநடந்து
மதிகுருஅவர் மொழிசொல்தனை தவறாது மனம்நிறுத்தி
தேர்வுக்குப்பின் தேர்வாகக் கரம்நோகத் தாளெழுதி
பெறுமதிப்பெண் ஒப்பிட்டு உயர்கல்வி முடித்திட்டு
ஆயிரம்பொன் கொடுத்தாலும் அரசுப்பணி ஆகாதென
ஐநூறு இடத்திற்கு ஐயாயிரம் விண்ணப்பம்
எறிவேலது கரம்திகழக் களம்மோதும் படையன்ன
நிலங்கொள்ளப் புரிபோரொத்துப் பணிகொள்ள மனங்கொண்டு
நாளெல்லாம் துயர்பட்டு உளம்மகிழ வென்றிட்டு
அடைபணிதனை விருப்புடனே உடனேற்றுக் கைக்கொண்டு
ஆலயம் இதுவென்றதன் தேவைகள் தானுணர்ந்து
ஏற்றப் பொறுப்புகள் திறம்பட முடித்திட்டு

மேலும்

Balakrishnan VS - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்

மேலும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய் அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
Balakrishnan VS - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2018 6:41 pm

உயர்வானம் நிலைக்கொண்டக் கார்மேகம் நீர்தூவ
பிளவுண்ட நிலம்வழி உயிர்த்துளி உடன்பாயும்
மின்னலென மெலிந்தருவி வெள்ளமென உருக்கொள்ளும்
வானுயர் நெற்கதிர் மனம்நெகிழ்ந்து தலைசாய்க்கும்
அடுக்கடுக்காய் நிலம்தனையே புற்பூக்கள் தரைநிறைக்கும்
நிலம்கொண்டத் தாகமெல்லாம் நீர்வரத் தீர்ந்தடங்கும்
வறண்டிருக்கும் ஏரியெல்லாம் வான்பொழியப் பொங்கிவரும்
வளத்தோகைக் கொண்டமயில் நின்வரத்து உவந்தாடும்
துயில்கொண்ட விதையாவும் நிலம்பிளந்து துளிர்த்தெழும்
துறவியன்ன இலையுதிர்த்தக் கிளையாவும் உயிர்பெறும்
புவிவள்ளல் யாவர்க்கும் பொதுவிதியாய்த் தானமையப்
புகழ்படப் பொழிந்திடும் வளம்தரு வான்மழை

மேலும்

Balakrishnan VS - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2018 9:58 pm

கூவும் சேவலும் முழங்கும் சங்கும்
இடுப்பணி வேட்டியும் மார்பணி கவசமும்
கரம்பிடித்த ஏரும் தோளணைத்த வில்லும்
தாள்தைத்த முள்ளும் உடலேற்ற வாளும்
ஏர்கீறு நிலமும் தேரழுந்து தடமும்
உடல்முழு தும்தான் ஏற்றவெண் புழுதியும்
உடல்வழி வியர்வையும் நிலம்சிந்து குருதியும்
ஏற்ற கடமையில் தான்கொண்ட உறுதியும்
ஏர்கொண்ட மாடது தேர்கொண்ட பரியொக்க
உழுகளம் அதுவே போர்க்களம் ஆக
வீடுசேர் நெல்லும் நாடுசேர் புகழும்
உழவும் மறமும் இருகண் நமக்கே

மேலும்

Balakrishnan VS - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2018 4:37 pm

பிரம்மனே உதவிடுவாய்
***********************************************
சிறுஉதவி கேட்கவே சீ எனும் என்னுள்ளம் !
பெரும்பதவிப் பேயனெனைத் தூ எனாதே சீரார்
அறுபத்து மூவராம் அன்பர்தம் கூட்டில்
ஒருவனாய்ச் சேர்த்திணைத்து வைத்திடுவாய் !

மேலும்

மிக்க நன்றி ஐயா. இப்பாடல் வரிகள் அடியேனால் இயற்றப்பட்டவை. தங்களின் கருத்தால் மனம் மகிழ்கிறேன். 04-Dec-2018 6:47 pm
அருமையான வரிகள் ... 04-Dec-2018 10:50 am
அருமை அருமை தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி . இது நால்வரில் எவர் அருளியது . கூறிட மகிழ்வேன் நன்றி 04-Dec-2018 7:31 am
நீறொடு நன்நாகம் அணிதிகழ் தேகன் பொங்கு வளகங்கை பிறைமதி சூடி ஆடல் தான்புரிய அகிலம் இயக்கிடும் பேயோன் எம்பிரான் பொன்னடி சேர்மினே 02-Dec-2018 10:21 am
Balakrishnan VS - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2018 4:16 pm

பிரம்மனோடு ஒரு வாதம்
*******************************************************
உன்சிரங்கள் நான்கில் ஒருசிரத்தைக் கிள்ளிய
எம்பெருமான் பக்தன் யானாவேன் ! என்சொல்கேள் !
என்னைப் படைத்தால் சிவனடியார் கூட்டத்தில்
இன்னுமொரு எண்கூடும் என்றெண்ணு !

மேலும்

சொற்பிழைக்கு வருந்துகிறேன் . சுட்டியதற்கு நன்றி 04-Dec-2018 7:27 am
கவிதை மிக நன்று. தங்கள் பக்திக்கு எனது வணக்கங்கள். ஆனால் ஒருசிறு திருத்தப் பரிந்துரை. சிரங்கள் ஐந்தில் ஒன்று கிள்ளப்பட்டே எண்ணிக்கை நான்கானது. வாழ்த்துக்கள். 02-Dec-2018 9:48 am
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 26-Nov-2018 4:48 pm
எல்லாம் இறைவனின் திருவிளையாடல் தான்... 26-Nov-2018 4:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே