ரேவதி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ரேவதி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 275 |
புள்ளி | : 21 |
கல்யாண உலகில் உள்ள காதல் வனத்தில்
இன்று இலையுதிர் காலமோ
இருக்கட்டும் காலச்சக்கரம் சற்றும் பொழுது
வசந்த காலம் வராமலா போய்விடும்..
எல்லாரிடமும் நட்பைத் திருடிக் கொள்ளும் கள்வன்
ஆனாலும் அவனிடம் பத்திரமாய் இருப்பேன் என நட்பே நினைக்கும்
அவன் நட்பின் தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீன்களுக்கு தான் மீள எண்ணமே இல்லை
காண முடியாத காற்றை போல் இருந்தாலும் எப்போதும் உடன் இருக்கிறேன் என்று உணர்த்தும் என் நட்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அம்மா.. அம்மா.. உன் அன்பை ஒற்றை வார்த்தையில் அடைக்க
என் தமிழுக்கு தெரியவில்லையே..
என்னுள் தோன்றிய முதல் காதல் நீயே கண்ணம்மா..
ஏழு ஜென்மத்திலும் உன் அன்பு கிடைக்கும் வரம் மட்டும் கொடும்மா...
சொல்லம்மா ஒரு வார்த்தை மகளே என்று என் உயிரையும் விட்டு ஓடி வருவேன்..
அம்மம்மா.. இறைவனும் இரந்து நிற்பான் உன்னிடம் தாய் பாசம் வேண்டி..
வேண்டும்மம்மா என் வாழ்வின் ஒவ்வொரு நொடியுலும் நீ வேண்டும்மம்மா....
கடவுள் படைத்த காயத்ரி மந்திரம் அவளோ
வெளிப்படையான பேச்சிலும் வெகுளிச் சிரிப்பிலும் மந்திரம் வீசுவாள்
நட்பையும் மயங்க வைத்த குறும்புக்காரி அவள்
மயங்கி தான் விழுகிறேன் இவள் நட்பின் மந்திரத்தில்
என் உணர்வுகளை எல்லாம் சுமந்த துடிக்காத இரண்டாம் நெஞ்சம் நீ அல்லவா
அசைவற்ற உன் உடலில் எத்தனை உயிர்களைக் கண்டிருக்கிறேன் அறிவாயா
உனக்கென்று கரம் இருந்திருந்தால் காதலனாய் அரவணைத்திருப்பாய்
உனக்கென்று குரல் இருந்திருந்தால் தோழியாய் துணை நின்றிருப்பாய்
உனக்கென்று இதயம் இருந்திருந்தால் தாயைப் போல் காத்திருப்பாய்
துக்கமோ தூக்கமோ வெட்கமோ சந்தோஷமோ உன் மடி சாய்ந்த பிறகே அது நிறைவடையும்
நதிகளாய் ஓடும் என் உணர்வுகளின் சங்கமம் நீ
உனக்கு தலையணை என்றல்லாமல் தலைத்துணை என்றே பெயரிட்டிருக்கலாம்
கண் மை இட்டு
கண்ணீரை மறைத்து வைத்தேன்
கல் மனசு இவளுக்கு
கலங்கட்டும் இன்னும் கொஞ்சம் என்று
கஷ்டத்தை எனக்கு அள்ளி தந்தாயோ இறைவா
கவலை எனக்கு இல்லை
உன் பிள்ளை நானல்லவோ
சோதனை தரும் இறைவா அது தீரும் வழியும் தருவாயே
உன் திருவடி சரணம் பணிகிறேன்
வழியோடு வலிகளை தாங்கும் சக்தியையும் தந்து அருள் புரிவாயாக...
நானெல்லாம் அவனாகி என்னை மறந்து நான் இருக்க
அவன் என்னை மறுத்து இருந்தால் என் இதயம் கண்ணீராய் உதிரம் உதிர்காதா
அவன் சுவாசத்தில் வாழ்ந்த என்னை தள்ளி வைத்தால் என் உயிரும் உருகாதா
தொட்டு அணைத்து என்னை தாலாட்டும் அவன் கரங்கள் இன்று தீண்டாது இருந்தால்
தூங்காது என் தேகம் தீயாய் எரியாதா
கொண்ட ஊடல் எல்லாம் உளி போல் என்னை தாக்கினாலும்
சிற்பம் போல என் காதல் உரு பெறும் என்ற நம்பிக்கையில் நான்....
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா
அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா
என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க
அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய்
அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா
எதை அழகு என்பேன்
எழில் தேசத்தில் அவள் ராஜ்ஜியம் தான்
மூன்று எழுத்தில் சுருங்கிய அழகிற்கு விரிவாக்கம் தந்தவள்
அவள் அழகுக்கு உவமை தேட வைத்தவள்
அழகுக்கே உவமையாய் வந்தவள்
அழகியல் பாடத்தை அகிலத்திற்கு கற்பித்தவள்
அவள் அழகை வர்ணிக்கவே மொழிகள் யாவும் பிறந்தனவோ!
அழகயே மயக்கிய அழகின் அரசியே,
என் கவிதையின் அர்த்தத்தில் உன்னைக் காண்கிறேன்
என் கவிதையின் அர்த்தத்தை உன்னில் காண்கிறேன்.!