தலையணை
என் உணர்வுகளை எல்லாம் சுமந்த துடிக்காத இரண்டாம் நெஞ்சம் நீ அல்லவா
அசைவற்ற உன் உடலில் எத்தனை உயிர்களைக் கண்டிருக்கிறேன் அறிவாயா
உனக்கென்று கரம் இருந்திருந்தால் காதலனாய் அரவணைத்திருப்பாய்
உனக்கென்று குரல் இருந்திருந்தால் தோழியாய் துணை நின்றிருப்பாய்
உனக்கென்று இதயம் இருந்திருந்தால் தாயைப் போல் காத்திருப்பாய்
துக்கமோ தூக்கமோ வெட்கமோ சந்தோஷமோ உன் மடி சாய்ந்த பிறகே அது நிறைவடையும்
நதிகளாய் ஓடும் என் உணர்வுகளின் சங்கமம் நீ
உனக்கு தலையணை என்றல்லாமல் தலைத்துணை என்றே பெயரிட்டிருக்கலாம்