வட்ட வட்ட நிலவே

வட்ட வட்ட நிலவே
வானில் உலாவரும் அழகே

கவிஞர்களின் பாடு பொருளாகி
காவியங்கள் பல படைக்கிறாய்

நட்ட நடு வானத்திலே
நாளும் நீ சுழல்கிறாய்

நீல நீள வானத்திலே
நீக்கமற நீயே நிறைந்தாயே

கதிரவன் கண்ணுறங்கும் நேரத்தில்
காரிருளை போக்க வாராயோ

கீழே இறங்கி வருவாயா
கிழக்கில் நீயும் உதிப்பாயா

மலர்கள் மொட்டவிழும் வேலையில்
மகரந்தப்பெண்ணே நீயும் வாராயோ

நித்தமும் என் பக்கம் வந்து
நிம்மதியாய் பல கதைகள் பேசாயா

எழுதியவர் : உமாபாரதி (29-Dec-18, 10:24 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : vadda vadda nilave
பார்வை : 4328

மேலே