Saami Ezhilan - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Saami Ezhilan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Sep-2017
பார்த்தவர்கள்:  279
புள்ளி:  66

என் படைப்புகள்
Saami Ezhilan செய்திகள்
Saami Ezhilan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 11:17 am

சகோதரிக்கு...

சகோதரியே
உன்
மீது
கீறப்பட்ட
கீறல்களின்
வலியை
தேசம்
தன்மீது
கிழிக்கப்பட்ட
வலியாகவே
உணர்கிறது.

உனது
ஒடிந்த
குரலில்
ஒடிந்துப்
போனது
நூறுகோடி
இதயங்கள்.

உனது
அழுகையில்
கோயில்
மணியோசையும்
நின்று
போனது.

உன்னுடன்
நட்புகொண்டவர்கள்
உறவு
என்று
சொல்லிக்கொண்டவர்கள்
இழைத்த
இன்னல்களால்
நீ
வாழ்விழந்து
போனதாகக்
கருதாதே.

இக்
கொடுஞ்செயல்
புரிந்தவர்கள்
உருவிழந்து
நாணயமிழந்து
இதயமிழந்து
வெட்கமிழந்து
எல்லாவற்றையும்
இழந்து
மனிதர்கள்
என்ற
நிலையையும்
இழந்து
மண்ணாகிக்
கொண்டுள்ளனர்
என்பதை
அவர்தம்
பெற்றோர்கள்
மட்டும்
அறிந்த
உண்மை.

ஒன்று

மேலும்

Saami Ezhilan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 11:10 am

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

அங்கன
யாரோ
மோடியாம்
ஒரு
ரண்டாயிரம் ரூவா
தாராங்களாம்.

இங்கன
ஈபிஎஸ்ஸோ
ஓபிஎஸ்ஸோ
எம் புள்ளைக்கு
இன்னொரு
ரண்டாயிரம்
ரூவா
தாராங்களாம்.

வாணாங்க
அய்யா
வாணாங்க
அய்யா
ரூவா
வாணாங்க
அய்யா.

ஆத்தாவும்
அய்யாவும்
கிளம்பிட்டாக.

சொத்துசுகம்
போனப்பக் கூட
யாரிட்டேயும்
கையேந்தலையே
சாமி.

எம்
புள்ளை
தெல்லியிலே
நாகணக்கா
காத்திருந்தானே
எங்கிட்டு
போயிருந்தீங்க
சாமி.

வயலெல்லாம்
காஞ்சிப்
போச்சுது.
கஞ்சிக்கும்
வக்கத்துப்
போனோம்.
கோவணம்
நனைக்கக்கூட
தண்ணிதாவா
இல்லாமப்
போச்சே.

நிண்ண
சொச்ச
சோளத்தை
விக்கப் போனாக்க
வேபாரிங்க

மேலும்

Saami Ezhilan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2019 11:08 am

எவருக்குள்
எவர்?

எவருக்குள்
எவர்
அடக்கம் என்பது
அடக்கம் வரை
நீள்கிறது.

பாலுடன்
கலந்த
நீர் போல
பால் பேதங்கள்
பாலாடை முதல்
பாடை வரை
தொடர்கிறது.

கருவில் இருப்பது
மகள் என்றவுடன்
நெரிக்கப்படுகின்றனர்
திருமகள்கள்.

மழலையர்
வகுப்பிலேயே
தனித்தனியிடம்.

முடி வளர்ப்பது
ஆடை அணிவது
ஊண் உண்பது
ஆட்டம் பாட்டம்
சொத்துசுகம்
எல்லாவற்றிலும்
அரசியல் சட்டத்தை
மிஞ்சிய
சட்டங்கள்.

வல்லரசு
நல்லரசு
கனவு நாட்டில்
மகளிர்
ஆடவருக்கென்று
தனித்தனி
வகுப்பறைகள்.

வாழ்ந்த காலத்தில்
மலர்களாக
வாழ்ந்திட்ட பெற்றோர்கள்
தம் பிள்ளைகளை
வளர்க்கும்
காலத்தில்
முட்களானது ஏன்?

இடையி

மேலும்

Saami Ezhilan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 3:36 pm

வானம்

இயற்கையை வணங்குதல்
என்பது
இயற்கையோடு
இயைந்து
வாழ்ந்தவர்களின்
காலத்தில்
கடந்துபோன
வழிபாடு.

கடல்கடந்து
வந்தவர்களின்
காட்டிய
வழியால்
இது
கடந்து போனது.

வணங்குதல்
என்பது
பணிதல்
என்பது மட்டுமல்ல...
சரணடைதலோடு
முடிவதும் அல்ல...
இசைதல்.
ஈதலுடன்
இசைபட வாழ்தல்
என்பதே
அது.

தன்னை முழுமையாக
வெளிப்படுத்திக்
கொள்கிறது
ஒளிவுமறைவின்றி
இயற்கை.

எந்த
கைகளாலும்
எளிதாக
மறைத்துவிட இயலாது
கதிரவனின்
கதிர்கைகள்
உட்பட.
நிழலாலும்
நிறைத்துவிட முடியாது.
அதுதான்
இயற்கையின்
பேராற்றல்.

வெளிப்படை
என்பதும்
வெளிப்படுத்துவதும்
இயற்கையின்
பாடங்கள்.
மனிதர்களின்
ஆளு

மேலும்

Saami Ezhilan - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்

மேலும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய் அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2018 7:03 am

கலை ஞாயிறுக்கு சிலை

சிற்பிக்கு
எங்காவது
சிலை வைப்பார்களா?
ஆம்!
முதன்முறையாக
வைத்தார்கள்...
தமிழகத்தை
வடிவமைத்த
சிற்பிக்கு.

யார் சொன்னது
கலைஞர்
ஆலயங்களுக்கே
சென்றது இல்லை என்று?

வாழ்நாள் முழுதும்
அண்ணா அறிவாலயம்
சென்றவர் தானே
கலைஞர்!

அதனால் தான்
அண்ணாவின்
நினைவுகளோடும்
எண்ணங்களோடும்
வாழ்ந்தவருக்கு
அவரருகே
அங்கு பூவுடலும்
இங்கு சிலையும்.

கணிப்பொறிகள்
என்ன
செய்துவிடும்
இவரது
நினைவாற்றலுக்கு
முன்?

அதனால் தான்
எதிர்கட்சியினர்
என்றாலும்
புன்முறுவலோடு
அரவணைத்ததை
எண்ணி
மறக்காமல்
சிலையிலும்
புன்னகைக்க
வைத்தனர்
போலும்.

தமிழுக்கான
முதல் பல்கலைக்

மேலும்

Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Dec-2018 10:23 pm

பனிக்குடம்

பனிக்குடம்
உடையும் முன்பாகவே
உடைந்து நொறுங்கியது
கருவைச் சுமந்த
பூ ஒன்று
மனிதத் தவறுகளால்.

மலரும் முன்பாகவே
மொக்கும்
கருகிவிடுமோ
என அஞ்சி
துடிதுடிக்கிறது
தாயுள்ளம்.

உயிர்க்கொல்லி நோய்
வராமல் இருக்க
'விழிப்புடன் இருப்போம்,
வருமுன் தடுப்போம்'
என
அரசு மருத்துவமனையில்
தட்டி வைத்தவர்கள்
மறந்தது எதை?
தடுத்தது எதை?

கோடி கோடியாக
கொட்டிக் கொடுத்தாலும்...
அரசு பணியைக் கொடுத்தாலும்...
ஒரு தாய்மைக்கு
ஈடாகுமா
இவை யாவும்?

வறுமை சாகும்வரை
சாகாது
இத் தேய்வு நோய்.

நாடாளும்
அவைகளில்
இருபாலரும்
சரிநிகர் எண்ணிக்கையில்
அமர்ந்து வாதிடும்
நாளே
விடுதலை நாள

மேலும்

Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2018 9:44 am

புதுப்புனல்

- சாமி எழிலன்

சமய இழைகளில்
இளைப்பாறிக் கிடந்த
கீழிருந்த கிழக்கையும்
மேலிருந்த மேற்கையும்
செறிவுமிகு
சுடர் பேச்சால்
இணைத்து வைத்த
உலகின்
முதல் இணையம்!

கிழக்கு தேசத்தினர்
கீழ்
கீழ் சேவகம்
புரிந்த தேசத்தினரை
எழுப்பிய
எழுச்சி சூரியன்!

பழமைச்சிறையில்
உழன்றவர்களை
ஞானச்செருக்கால்
நிமிரச் செய்த
புதுப்புனல்!

ஆண்டாண்டுகளாய்
அடிமை சாசன
இல்லங்களில்
தவமிருந்த
குலவிளக்குகளை
விடுவித்திட
வீரநெறியூட்டிய
விடிவெள்ளி!

மண்மூடி
கண்மூடி
புதையுண்டு கிடந்த
'தன்னையறிதல்'
எனும்
கல்விப்
புதையலை
புரட்டியெழுப்பிய
புரட்சிப்புயல்

கழனிக்காடுகளிலும்
காதல் சோ

மேலும்

Saami Ezhilan - Saami Ezhilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2017 12:32 pm

ஒவ்வொரு தாய்க்கும் மகவை பெற்றெடுக்கும் அந்த நொடிப் பொழுதுகள்... மரணத்திற்கான முன்னோட்டங்கள். ஆனால் தாயுள்ளத்தின் குறியீடாக வரலாற்றில் விளங்கிடும, அற்புதம் அம்மாள் அவர்களுக்கு, கடந்த 26 ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியும், மரண வாசலில் ஊசலாடும் தனது மகனை எண்ணியே நடக்கிறது மகப்பேறு அனுபவம். தனது மரணத் தண்டனைக்காகவும் , தனது விடுதலைக்காகவும் பல ஆண்டுகள் காத்திருந்தவர்களைத் தான் உலகம் பார்த்து இருக்கிறது. ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறை வாசலில், விடுதலையாகி வரும் மகனை உச்சி முகர்ந்து, கட்டித்தழுவிட காத்திருக்கும் தாயை உலகம் முதன் முறையாகப் பார்க்கிறது. ஒரு தாய்க்குத் தான் ஒரு தாயின் உள்ளம் தெரிய

மேலும்

விடுதலை என்ற சொல்லில் சட்டமும் இன்று விடுமுறையானது. நீதியான உள்ளங்கள் தெருவில் கிடக்கும் குப்பைகள் போல் ஊமையாகவே கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2017 6:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே