ஒரு நீலத்திமிங்கலத்தின் பாடல்

ஆங்கே விரிகடல் மேல்பரப்பு வீசு வெள்ளலை
திரண்டு உயரெழ நிலைகெடும் மரக்கப்பல்
தன்னுள் உறைபொருள் மக்கள் யாவர்நலம்
பிழையின்றித் தான்காத்துப் பேரிடர் உடன்தவிர்க்கும்
ஈண்டு ஆழ்கடல் நீருலகில் ஆயிரம் எழில்மீன்கள்
சூழ்ந்தமையச் சுற்றத்துடன் வாழ்எம் வீடதனில்
பசியுணர்வு அகம்நிறைக்க உயிர்நேயம் உணர்வகல
ஊனுண் விருப்புற்றுக் கூர்வேல் கரம்வீச
உடல்கிழிய வழிகுருதி நீர்க்கலந்து சிவந்தமைய
நான்படும் பெரும்பாடு கடல்ஆழத்தில் மறைந்தொழிய
நிலம்வாழ்வோர் தம்வாழ்வை இடரின்றித் தாம்தொடர
அழிவின் விளிம்பதனில் தவிப்புடனே நாள்கடத்தும்
எம்மினத்தோர் உய்வடையக் கலமொன்றுத் தருவீரே

எழுதியவர் : பாலகிருஷ்ணன் வை ச (9-Jul-19, 6:10 pm)
சேர்த்தது : வை ச பாலகிருஷ்ணன்
பார்வை : 132

மேலே