கழிந்தன ஆண்டறுபது

நாசுழற்றி வாய்திறந்து முதற்சொல் மொழிதினம்முதல்
தோள்கனக்கப் பொதிசுமந்து ஏடெடுத்துக் கலைபயின்று
நாள்தோறும் வீடுமுதல் பள்ளிவரை வழிநடந்து
மதிகுருஅவர் மொழிசொல்தனை தவறாது மனம்நிறுத்தி
தேர்வுக்குப்பின் தேர்வாகக் கரம்நோகத் தாளெழுதி
பெறுமதிப்பெண் ஒப்பிட்டு உயர்கல்வி முடித்திட்டு
ஆயிரம்பொன் கொடுத்தாலும் அரசுப்பணி ஆகாதென
ஐநூறு இடத்திற்கு ஐயாயிரம் விண்ணப்பம்
எறிவேலது கரம்திகழக் களம்மோதும் படையன்ன
நிலங்கொள்ளப் புரிபோரொத்துப் பணிகொள்ள மனங்கொண்டு
நாளெல்லாம் துயர்பட்டு உளம்மகிழ வென்றிட்டு
அடைபணிதனை விருப்புடனே உடனேற்றுக் கைக்கொண்டு
ஆலயம் இதுவென்றதன் தேவைகள் தானுணர்ந்து
ஏற்றப் பொறுப்புகள் திறம்பட முடித்திட்டு
கரம்முதுகும் தினம்நோக மனம்முகமது மெய்மறைக்க
வருடங்கள் உருண்டோடக் கழிந்தன ஆண்டறுபது

எழுதியவர் : பாலகிருஷ்ணன் (14-Jan-19, 10:40 pm)
சேர்த்தது : வை ச பாலகிருஷ்ணன்
பார்வை : 62

மேலே