நன்றி சொல்லும் நாள்

வெண்ணைபோல் வெயில் உருக்க
வியர்வையை மழையாய் சிந்தி
உண்ணுதற்கு உணவு தந்த
உழவர்க்கு நன்றி சொல்வோம்!
மண்ணினை உழவு செய்த
மாடுகட்கு நன்றி சொல்வோம்!
புண்ணிய திருநா ளான
பொங்கலுக்கு நன்றி சொல்வோம்!

எழுதியவர் : மா.அரங்கநாதன் (14-Jan-19, 10:04 pm)
சேர்த்தது : மாஅரங்கநாதன்
Tanglish : nandri sollum naal
பார்வை : 165

மேலே