மாஅரங்கநாதன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மாஅரங்கநாதன்
இடம்:  பெரிய தள்ளப்பாடி. கிருட்ட
பிறந்த தேதி :  01-Jun-1947
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2019
பார்த்தவர்கள்:  725
புள்ளி:  17

என்னைப் பற்றி...

அரசுப் பணி ஓய்வு
அருந்தமிழ் ஆர்வலர்.

என் படைப்புகள்
மாஅரங்கநாதன் செய்திகள்
மாஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2019 7:49 pm

கைப்பேசி

கைப்பேசி, கடவுளா?
கைகளில் சாத்தானா?
பொய்ப்பேசி! சிலருக்குப்
புறம்பேசி! நல்லவர்
மெய்ப்பேசி! நலிந்தவர்
வெறும்பேசி! பன்முக
கைப்பேசி! பெண்களே!
கவனமாய்க் கையாள்க!
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மாஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2019 9:17 am

நல்ல காலம் பொறக்குமா??

தோற்றுப் போனோம்!இயற்கையை
தொழுது வேண்டும்
காலம் வருமோ?
ஆற்றில் வெள்ளம் வராமல்
அற்றுப் போகும்
காலம் வருமோ?
காற்றை விலைக்கு வாங்கி
உயிரைக் காக்கும்
காலம் வருமோ?
வேற்றுக் கிரகம் தேடியே
விரைவாய் ஓடும்
காலம் வருமோ?

நாற்றும் நடவும் இல்லையே!
உழவே நசுங்கும்
காலம் வருமோ?
சோற்றுக் கலையும் கூட்டமாய்
'சுமேலியா' ஆகும்
காலம் வருமோ?
மாற்று வழிகள் போதித்த
மாந்தரை மறந்த
காலம் வருமோ?
நேற்று நாட்களை எண்ணியே
நினைந்தே உருகும்
காலம் வருமோ?
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மாஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2019 9:02 pm

மறதி

மறதி... இயற்கை
மனிதனுக்கு அளித்த கொடை!
இயற்கை
பல நிகழ்வுகளை
மறக்கடிக்கிறது!
சில நிகழ்வுகளை
புதப்பிக்கிறது!
'இதுவும் கடந்து போம்'
என்பதை
மறதிதான் இழுத்துச்செல்கிறது!
நன்றி உணர்வுக்கு
மறதி எதிரி!
மறந்தால்...
நன்றி கெட்டவர்கள்!
'மறந்து விட்டேன்!'
வசதியான வார்த்தை!
மக்களின் மறதி
மாற்றம் அரசியலில்...
அன்றாட நிகழ்வுகளை
அழகாக செய்திட
மறதியைப்
புறந்தள்ளுதலே
புத்திசாலித்தனம்!
பெரியமனிதர்களின்
மறதிக்கு மாற்று
செயலாளர்கள்!
சிறியோருக்கு
சின்ன காகிதம் போதும்!
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மறதியை இந்த மாயவலையில் அரங்கேற்றிய அரங்கநாதனுக்கு என் வசதியான வாழ்த்துக்கள்.. சகோ.. 11-Nov-2019 12:31 pm
மாஅரங்கநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2019 4:42 pm

தாய்மொழி தினம்

தாய்மொழியே!
தமிழ் மொழியே!
பனைஓலையில் பிறந்தாய்!
பாராங்கல்லில் தவழ்ந்தாய்!
அச்சினில் அமர்ந்தாய்!-மின்
அணுவிலும் மிதந்தாய்!
காலத்தைக் கடந்தாய்!
கன்னித்தாய் ஆனாய்!
ஞாலத்தின் தொல்மொழியே!
நாம்தொழும் உயிர்மொழியே!
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2019 2:56 pm

"மரம் நடுங்களேன்"

மரம் நடுங்களேன்!
மனித குலமே!
மரம் நடுங்களேன்!

அடுத்த தலைமுறைக்கு
கொடுத்துப் போக
மரம் நடுங்களேன்!

ஐம்பது ஆண்டுகளில்
நீருக்கு அலையும்
சம்பவம் நடக்கும்!
மரம் நடுங்களேன்!

மழையைப் பெருக்கி
பழைய பூமியைப்
பார்ப்பதற்கே,
மரம் நடுங்களேன்!

பூமிப் பந்தினை
சாமி காக்குமோ??!!
சந்ததி காத்திட
மரம் நடுங்களேன்!

உலகம் முழுவதும்
ஒருகுவளை நீருக்கு
கலகம் வருமுன்
மரம் நடுங்களேன்!

வேப்ப மரங்களை
புங்க மரங்களை
வேண்டி நடுங்களேன்!
மரம் நடுங்களேன்!

காப்புரிமை யென்று
களவாடிப் போகுமுன்
காத்து நடுங்களேன்!
மரம் நடுங்களேன்

மேலும்

நன்றி அய்யா 11-Feb-2019 10:11 pm
நன்றி அய்யா 11-Feb-2019 10:10 pm
அருமை... 11-Feb-2019 9:55 pm
நன்றாய் அழைப்பு விடுத்துள்ளீர் கவிதை மூலமாக அருமை. 11-Feb-2019 6:27 pm
மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2019 9:00 am

குடியரசு நாள்.
26-01-2019.

அறிஞர் பெருமக்கள்
அதிக முறை கூடி
அலசி ஆராய்ந்து
அமைத்த சாசனம்!

அரசியல் சட்டம்!
குடியரசு நாள்!

நாமே நமை ஆள
நடைமுறைக்கு வந்த நாள்!

உலக நாடுகளில்
ஒப்பற்ற நாடு!
பெரிய குடியரசென
பேர் பெற்ற நாடு!

காரணமே அதன்
பன்முகத்தன்மை!
ஒருமுக மாக்கினால்
ஒருபோதும் நிற்காது!

சொல்லப் போனால்
பல்மணி மாலை!
மணிகள் சில பல
குறையும் சேரும்
நூலை அறுத்தால்
சிந்தும் சிதறும்!

நூலாம் குடியரசை
நூறுமுறை போற்றுவம்!!
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2019 10:50 pm

குற்றேவல் தொடரும்....!

பிள்ளை பிறந்தது!
பெருமகிழ் வந்தது!
அள்ளி அணைத்ததால்
ஆனந்தம் தந்தது!
பள்ளி சென்றது!
பலவும் கற்றது!
மெள்ள நகர்ந்து
மேல்படி முடித்தது!
கொள்ளை அழகாய்
குடும்பம் அமைத்தது!
வெள்ளை மனது
பிஞ்சுகள் பிறந்தன!
'புள்ளி' தான் என்ற
புகழும் கிடைத்தது,
வெள்ளை முடிவந்து
விழுந்தது! வீழ்ந்து
கொள்ளி வரும்வரை
குற்றேவல் தொடரும்....!

மா.அரங்கநாதன்

மேலும்

மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2019 9:25 am

என்று திரும்பும்
இயற்கை அன்னை!

நெல்லு விளைந்த நிலத்தில்
கொள்ளு இல்லையே!
வெல்லம் கிடைத்த இடத்தில்
எள்ளு இல்லையே!

எட்டி மொண்ட கிணறு
எங்கும் இல்லையே!
பட்டி தொட்டி கால்நடை
பார்ப்ப தில்லையே!

எருவும் இலையும் இட்டபயிர்
எங்கும் இல்லையே!
பருவம் மாறிப் போனதால்
பசுமை யில்லையே!

அன்று கண்ட முப் போகம்
அறவே யில்லையே!
என்று திரும்பும் 'இயற்கை'
எந்தன் அன்னையே?
மா.அரங்கநாதன்🙏

மேலும்

மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2019 9:33 pm

உணவின்றி

மேலும்

மாஅரங்கநாதன் - மாஅரங்கநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2019 9:30 pm

இயற்கை அன்னாய்!

எங்கே போனாய்?

பல்வண்ணச் செடிகள்! பூக்கள்!
பனிபோர்த்தும் வயல்கள்! தோட்டம்!
புல்பண்ணை! ராகம் பாடி
போட்டியிடும் புள்ளி னங்கள்!
கல்மண்ணால் ஆன வீடு!
காடுவளம்! எதையும் காணோம்?
சொல்லொண்ணா சுரண்டல் செய்தே
தொலைத்திட்டோம் இயற்கை அன்னை!!

மா.அரங்கநாதன்

மேலும்

நன்றி அய்யா, தங்கள் பாராட்டு என்னை மேலும் ஊக்குவிக்கும். 17-Jan-2019 7:03 pm
சிறப்பான பதிவு அய்யா. இதைப் போல் தொடருங்கள் 17-Jan-2019 6:53 pm
மாஅரங்கநாதன் - பிரபாவதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2018 2:46 pm

சமீப காலமாக கவிதை சேர்க்கததால்
எப்படி புது கவிதை சேர்ப்பது என தெரியவில்லை

மேலும்

எழுத்து.காமில் கவிதைகளை எப்படி பதிவிடுவது? தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். நன்றி. மா.அரங்கநாதன் 10-Jan-2019 10:48 pm
மேலே உள்ள மெனுவில் "திருக்குறள்" "எழுது" "பொன்மொழிகள்" என்று வருவதில் "எழுது" என்பதை கிளிக் செய்து எழுதவும். 31-Oct-2018 4:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே