என்று திரும்பும் இயற்கை அன்னை
என்று திரும்பும்
இயற்கை அன்னை!
நெல்லு விளைந்த நிலத்தில்
கொள்ளு இல்லையே!
வெல்லம் கிடைத்த இடத்தில்
எள்ளு இல்லையே!
எட்டி மொண்ட கிணறு
எங்கும் இல்லையே!
பட்டி தொட்டி கால்நடை
பார்ப்ப தில்லையே!
எருவும் இலையும் இட்டபயிர்
எங்கும் இல்லையே!
பருவம் மாறிப் போனதால்
பசுமை யில்லையே!
அன்று கண்ட முப் போகம்
அறவே யில்லையே!
என்று திரும்பும் 'இயற்கை'
எந்தன் அன்னையே?
மா.அரங்கநாதன்🙏