தணிக்கை ஏற்கா சீரியல்
நேரத்தை நேர்மையாய் வீணடிக்க
நெடுந்தூரம் செல்ல வேண்டா ....
கவர்மெண்ட் அனுமதியோடு கள் குடித்து
கரண்டை தட்டி விட்டு கால்மேல் கால்போட்டு
கதவை அடைத்து கவலை மறந்து
தொட்டு ருசிக்க கறித்துண்டு துணையிருக்க.....
கண்ட கண்ட கசடுகளை தொல்லை காட்சியில்
கண்டு கழித்து கண் கட்டிவிட
கண் உரக்கம் தேடிடவும்...
இது முடியாது போக.....
குடும்பத்தோடு பார்க்க வேண்டுமானால்
நாள் நட்சத்திரம் கணித்து
சகுணம் சரிவர இருப்பது உத்தமம்...... ஏனெனில்
படித்த வயது வந்த பிள்ளைகள் இருக்க
பளவந்த பாலியல் பயிற்சி காட்சி பட்டறை கூடாது...
மாய உலகில்
மதி விதி சதி செய்யத் துணியும் வேளை
பாயை விரித்து படுத்துறங்க.....
சொந்தக் கருவூலம் கருச்சிதைவு இன்றி
மனத்திரையில் குடும்பச் சார்பாக
நாற்பட்ட சீரியலை அறங்கேற்ற..
தணிக்தை ஏற்கா சொந்த நாடகக் காட்சிகள்
நாசுக்காக கண்காட்சி ஒப்பந்தம் ஏற்று
மறு சுகப் பிரசவம் நிகழும்......
கெஞ்ஜும் பிஞ்ஜு மனது வேண்டுவது .....
மறு ஒலிபரப்பு நிகழாமல் இருப்பதைவே !
சுவாரிஸ்யம் இனி தொடராது...