வந்தாள் நானும் மலரென்றே

சுந்தரியோ மேனகையின் கைபவள மல்லியோ
நந்தவனத் தில்நர்த் தனமாடும் மல்லிகையோ
வெண்ணிற முத்தாய் சிரித்திடும் முல்லையோ
விண்ணில் கதிர்வர பூத்துவரும் தாமரையோ
நந்தவனத் தின்சௌந்தர் யப்பூ மலர்களே
தந்தேன்இவ் வெண்பா வினைஉங் களுக்கென்றே
வந்தாள்நா னும்மலரென் றே !

----பல விகற்ப பஃறொடை வெண்பா ----மற்றொரு வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jan-19, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே