குறிஞ்சிப் பூக்கள்

குறிப்பு :

குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 பூக்களை வைத்து எழுதுவதற்கு முயன்றது அதே போல் குறிப்பிடப்பட்டுள்ள 99 பூக்களில், சில பூக்களின் பெயர்கள் மீண்டும் வருவதால் அவற்றை ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்..


காந்தாள் ஒன்று
ஆம்பல் ஆகி
அனிச்சம் தனித்து
குவளையில் நிறைந்து
குறிஞ்சியில் பிறந்து
வெட்சியில் வளர்ந்து
செங்கொடுவேரினை கைபிடித்து
தேமா என்ற வாழ்வில்
மணிச்சிகையாக முத்துதித்து
உந்தூழாய் உறங்கி
கூவிளம்பாய் கூவி
எறுழ் தழாழய் எறிந்து
சுள்ளியாய் சிதறி
கூவிரம் கண்டு
வடவனம் தேடி
வாகை சூடி
குடசம் காண
எருவையாக மாறி
செருவிளை கொண்டு
கருவிளமாக மாறினாள்
பயினி கூடி
வானிறையாக
குரவமாக மாற்றம் கண்டு
பசும் பிடியாக வளர்ந்தாளே
வளருமாக மகிழ்ந்து
காயாபுரியாகி
ஆவிரை தேடி
வேரலாக நீண்டு
சூரலாக குறுகி
சிறுபூளையாக முளைத்து
குறுநறுங்கண்ணியாய்
குருகிலைத்து
மருதமதில் மாற்றம் கண்டு
கேங்கத்தில் ஏற்றம் தேடி
போங்கத்தில் மஞ்சள் குளித்து
பாதிரி
திலகமிட்டு
செருந்தி அருந்தி
அதிராமல் நடந்து
சண்பகம் சூடி
கரந்தையில் சந்தித்து
குளவி ஈன்றெடுத்து
மாவிலை தோரணம் கட்டி
தில்லை நாயகனை
பாலையில்
முல்லையால் வழிபட்டு
கஞ்சங்குல்லை வழங்கி
பிடவம் ஒடித்து
செங்கருங்காலி காணிக்கையாக்கி
வாழையடி வாழையாகி
வள்ளியை தரிசித்து
நெய்தலில் பந்தலிட்டு
தாழை கள்குடித்து
தளவம் சூடி
தாமரை கண்டு
ஞாழல் காண
மௌவல் முல்லை இணைத்து
கொருடி சாய்த்து
சேடல் கொண்டு
செம்மல் ஆகி
சிறுசெங்குரலி தேடி
கோடல் கேட்டு
கைதை வணங்கி
வழை குமரியணைத்து
காஞ்சி கண்டு
மணிக்குலை தூக்கி
பாங்கர் ஆக்கி
மராஅம் மௌனம் கொண்டு
தணக்கம் படர்ந்து
ஈங்கை உதிர்த்து
இலவம் பஞ்சாகி
கொன்றை சூடி
அடும்பு சுற்றி
ஆத்தி அடைந்து
அவரை உண்டு
பகன்றை சீண்டி
பாலசம் ருசித்து
பிண்டியாகி
வஞ்சியவளை நோக்கி
பித்திகம் சூடிட
சிந்துவாரம் ஏந்தி
தும்பை அணிந்து
துழாய் வணங்கி
தோன்றி
நந்தி கண்டு
நறவம் படைத்து
புண்ணாகம் வெட்டி
பாரம் நீங்கி
பீரம் காண
குருக்கத்தி கொண்டு
ஆரம் அமைத்து
காழ்வை புகையவிட்டு
புன்னை வணங்கி
நரந்தம் பரப்பி
நாகப்பூ படைத்து
நள்ளிருணாளி
குருந்தமாக
வேங்கை வளர்த்து
புழகு படைத்து
மலர்களை மாலையாக்கி
பாமாலை புனைய
நின் அருள்வேண்டி
நின் பாதம்
சரணடைகின்றேன் இறைவா...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (26-Jan-19, 1:42 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 824

மேலே