எழுதினேன் தனிமையில் ஒரு கவிதை
ஒரு கவிதை எழுதினேன் தனிமையில்
இதயத்தின் நிழலாக தொடரும் உன் நினைவினில்
ஒரு நிலவில் ஓர் ஓடத்தில் ஒரு மாலையில்
இருவரும் பயணித்த பொழுதின் இனிய நினைவில்
அப்போது துள்ளி வந்த அலைத்துளிகள்
உன் முகத்தில் தூவிய அழகினில்
எழுதினேன் தனிமையில் ஒரு கவிதை