விடாமுயற்சி திரைப்பட விமர்சனம் கவிஞர் இராஇரவி

விடாமுயற்சி !
திரைப்பட விமர்சனம் !
கவிஞர் இரா.இரவி !

என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம். அஜித்குமார் என்று அழைத்தாலே போதும் என்று ரசிகர்களுக்கு கட்டளை இட்டார். “அஜித் வாழ்க! விஜய் வாழ்க! என்று கோஷமிட்டது போதும் ரசிகர்களே! நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?” என்று அற்புதமான அறிக்கை விட்டு இருந்தார். அதைப் படித்தவுடன், அவர் படத்தைப் பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்து விடாமுயற்சி திரைப்படம் சென்று பார்த்தேன்.வேறு எந்த நடிகரும் இப்படி சொன்னதில்லை .ரசிகர் மன்றங்கள்கையும் ஊக்குவிப்பதில்லை .இவர்களாகவே பீர் ,பால் அபிஷேகம் செய்து நேரத்தை ,பணத்தை வீணடித்து வருகின்றனர் .

விடாமுயற்சி செய்து மனைவியைக் கண்டுபிடித்து இறுதியில் சேர்கிறார். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் திருக்குறளை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. மகிழுந்து ஓட்டும் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாம் பரிசு பெற்றுத் தந்தார் அஜித். உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்து இருந்து போதும் மனஉறுதியுடன் மகிழுந்து ஓட்டுவதை அவர் விருப்பப்பட்டு செய்வதால் அதில் வெற்றியும் கிடைத்தது.

முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள், “எந்த ஒரு செயலையும் இஷ்டப்பட்டு செய்ய வேண்டும், கஷ்டப்பட்டு செய்யக்கூடாது” என்று. அதுபோல அஜித் இஷ்டப்பட்டு மகிழுந்து ஓட்டியதால் வெற்றி கிட்டியது.

இந்த திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் மகிழுந்து ஒட்டும் காட்சிகளாகவே கதைப்படியே வருகிறது. அயல்நாட்டில் மகிழுந்து ஓட்டுவது அவ்வளவு எளிதன்று. அஜித் மிக எளிதாக. அதிக வேகமாக டூப் இன்றி அவரே ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.

திரைஉலகத்தில் உச்சத்தில் இருக்கும் அஜித், இந்த திரைக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட உயர்ந்த மனதிற்கு ஒரு சபாஷ். வேறு பிரபல நடிகர்கள் இந்த திரைக்கதையில் நடிக்க மறுப்பார்கள் .பிம்பம் சிதையும் என்று யோசிப்பார்கள் .இந்தப் படத்தில் முதல்பாதி வரை யாருடனும் சண்டை போடக்கூடாது என மனக்கட்டுப்பாடுடன் இருந்து, பலரிடமும் பொறுமையாக அடிகள் வாங்குகிறார். இரண்டாம் பாதியில் மனைவியை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலில் வேறுவழியின்றி சண்டை போடுகிறார். எதிரிகளை சுட்டுக் கொல்லாமல் காலில் மட்டும் சுடுகிறார். உதவி செய்யாத காவலர் சுடப்பட்டுக் கிடக்கும் நிலையில் வயர்லெஸ் மூலம் காவலர்களுக்கு தகவல் தந்து, மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறார்.

இந்தப்படம் கணவன் ,மனைவி இருவருமே பார்க்க வேண்டிய நல்ல பாடம். பல பாடங்கள் படத்தில் உள்ளது. பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற வேண்டி மனநிலையில் உள்ளவர்கள் இப்படம் பார்த்தால் மனதை மாற்றிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, பிரிந்து வாழும், வாடும் கணவன்-மனைவி இப்படம் பார்த்தால் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்.

கணவன்-மனைவி யாரும் சிறுதவறு செய்தால் ,இருவரும் மன்னித்து மறந்து ஏற்று வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கின்றது படம். இயக்குனருக்கும் பாராட்டுகள். இசையமைப்பாளர் அனிருத்துககும் பாராட்டுகள். அவருடைய அப்பாவிற்கும் படத்தில் காவல்துறை அதிகாரி வேடம் வழங்கி உள்ளனர். கதாநாயகி திரிஷாவும் நன்றாக நடித்துள்ளார். இளமைக்கால அஜித் திரிஷா காதல் காட்சிகள் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது. இருவரும் அன்பாக இணைந்து வாழ்கின்றனர். திரிஷாவிற்குக் குழந்தை பிறந்து இறந்து விடுகிறது. அதோடு இனிமேல் குழந்தை பெற வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சில ஆண்டுகள் அன்பாக வாழ்ந்துவிட்டு திரிஷா மணவிலக்கு பெற விரும்புகிறார். அம்மா வீட்டில் கொண்டு விடுங்கள் என்கிறார். அப்படி அழைத்துச் செல்லும் வேளையில் திரிஷா கடத்தப்படுகிறார். நடிகர் அர்ஜூன் வில்லனாக வந்து நன்றாக சண்டை போடுகிறார். அஜித் கதாநாயகனாக இருந்தும் பலமுறை அர்ஜூனிடம் அடிகள் வாங்குகிறார்.

அஜித் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் பேட்டி தருவதில்லை. பாடல் வெளியீட்டு விழாவிற்கும் வருவதில்லை என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். நடிகர் அஜித்தின் மனவலிமைக்குப் பாராட்டுகள்.விடாமுயற்சி வெற்றி தரும் .என்பதை மெய்ப்பித்துள்ளது .விடாமுயற்சி !

அஜித் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் பேட்டி தருவதில்லை. பாடல் வெளியீட்டு விழாவிற்கும் வருவதில்லை என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். நடிகர் அஜித்தின் மனவலிமைக்குப் பாராட்டுகள்.விடாமுயற்சி வெற்றி தரும் .என்பதை மெய்ப்பித்துள்ளது .

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (9-Feb-25, 11:10 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே