பெருந்தண் உறந்தையார் கோ - முத்தொள்ளாயிரம் 50
நேரிசை வெண்பா
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ! 50
- முத்தொள்ளாயிரம், சோழன் 25
பொருளுரை:
மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன்.