வயது
வயது
என்னுள் இருந்து
ஏதோ ஒன்று
எப்பொழுதும் நழுவி
கொண்டே இருந்தது
எத்தனையோ நாள்
எதுவென்று தெரியாமல்
தேடி பார்த்து பார்த்து
என் உடலே
ஏகாந்தமாய் சுருங்கி
போய்
ஒரு நாள்
புத்தனை போல்
தோன்றிய ஞானம்
நழுவியது எதுவென
பளிச்சிட
நழுவியது எதுவென புரிந்தும்
நழுவியது நழுவியதுதான்
இனி என்ன செய்ய ?
முகபூச்சும், கரு மையும்
தொங்கும் சதையை
இழுத்து பிடித்து
வெள்ளை நரையை
கரு மையை பூசி
நழுவி சென்று விட்ட
இளமையை
மறைத்து வெளியில்
உலவி கொண்டிருக்கிறேன்