பேய்மிரட்டி
பேய்மிரட்டி பற்றி பக்காலம்
பேய்மிரட்டி மூலிகை, தும்பை பேரினத்தைச் சேர்ந்தது. இது பெருந்தும்பை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் வெளிறிய வண்ணமும், வெகுட்டல் வாடையும் உடையது.
பேய்மிரட்டி மூலிகையின் பயன்கள்: காலராவை கட்டுப்படுத்தும், மருத்துவ குணமுடையது.
பேய்மிரட்டி மூலிகையைப் பற்றிய சில தகவல்கள்: எல்லா இடங்களிலும் வளர்வதில்லை, புதராக இருக்குமிடங்களில் அரிதாக காணப்படும், இதன் இலைகள் எதிர் அடுக்குகளில் அமைந்திருக்கும்.
பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.
பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.
பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.
பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.
பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
பேய்மிரட்டி இலையை ஆன்மிகரீதியாக குபேர முலிகை என்று அழைக்கிறார்கள். இந்த இலையை கொண்டு தீபம் ஏற்றினால் குடும்பத்தில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதை அபூர்வ வகை மூலிகை என்று சொல்வது போன்று மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட.
பேய் மிரட்டி இலையை விளக்கு திரியாகவும் பயன்படுத்துவார்கள். இதை உள்ளுக்கு எடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பேய் மிரட்டி இலையை கொண்டு வந்து கைப்பிடியளவு எடுத்து பொடியாக நறூக்கவும். இதை சுத்தமாக அலசி, ஒரு மண் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கருகாமல் வதக்கி ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு வடிகட்டி காலை, மாலை என சங்கு அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்! வேறு பலன்களும் உண்டு!
குழந்தைக்கு பல் முளைக்கும் போது பேதி உண்டானால் இந்த இலையை கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்து வெந்நீரில் 5 சொட்டு கலந்து குடித்து வந்தால் பேதி நிற்கும்.
வயிறு வலி அதிகமாக இருக்கும் போது அதை குணப்படுத்தும் சக்தி இந்த பேய் மிரட்டிக்கு உண்டு. பேய் மிரட்டி இலையை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து அதன் சாறை தனியாக எடுக்கவும்.
இதை வெந்நீரில் 10 மில்லி அளவு கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் வயிறு வலி நாள்பட்டு அவதியடைந்தாலும் தீரக்கூடும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.
மூட்டுகளில் வீக்கம் வலி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். அதிக முட்டி வலி இருக்கும்போது அது வீக்கத்தையும் உபாதையும் உண்டாக்க செய்யும். இந்த வீக்கத்தை குறைக்க பற்று மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இந்த இலையை கொண்டு வந்து விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி இளஞ்சூடாக அல்லது பொறுக்கும் சூட்டில் வீக்கம் இருக்கும் இடத்தில் வைத்து கட்டி வந்தால் வீக்கம் வற்ற தொடக்கும்.
காலராவுக்கு மருந்து இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு பேய் மிரட்டி உதவும். பேய் மிரட்டி அம்மியில் வைத்து இடித்து புதுச்சட்டியில் போட்டு அதனுடன் கைப்பிடி அளவு நெற்பொரியை போட்டு இலை இரண்டையும் வறுத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் ஆகும் வரை சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் அளவு கொடுத்து வந்தால் காலரா குணமாகும்.
வெந்நீரில் இந்த செடியின் இலைகளை போட்டு கொதிக்கவிட்டு அந்த நீரை ஆவி பிடித்தால் தலை பாரம், ஒற்றை தலைவலி நீங்கும். இது மண்டையில் இருக்கும் நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. அவ்வபோது தலைவலி தலைக்கு குடித்தவுடன் தலைபாரம் போன்ற பிரச்சனையை கொண்டிருந்தால் பேய் மிரட்டி இலையை சேர்த்து ஆவி பிடித்தால் படிப்படியாக கட்டுக்குள் வரும்.
வீட்டில் விஷ ஜந்துக்கள், கொசுக்கள் இருக்கும் போது அதை வெளியேற்ற எவ்வளவோ முயற்சி செய்திருப்போம். ஆனால் எதற்கும் அடங்காமல் அட்டூழியம் செய்யும் கொசுவை விரட்ட இந்த பேய் விரட்டி உதவும்.
மூல நோய் சரியாக நத்தை கறி சாப்பிடலாமா? சுத்தம் செய்து தயாரிக்கும் முறை!
இந்த இலையை அரைத்து அதன் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொசு இருக்கும் இடங்களில் அடித்துவந்தால் மீண்டும் கொசு வராமல் தடுக்கலாம். இனி பேய் மிரட்டி எங்கு பார்த்தாலும் மறக்காமல் பறித்து பயன்படுத்துங்கள்.