மனுவேந்தன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மனுவேந்தன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2019
பார்த்தவர்கள்:  1267
புள்ளி:  107

என் படைப்புகள்
மனுவேந்தன் செய்திகள்
மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2019 10:20 pm

என்னை நான் கேட்டேன்
உன்னை நீ தந்தாய்
எனையே கேட்பேன்
எதனை நீ தருவாய்

என்னை நான் பார்த்தேன்
உன் உருவம் கண்டேன்
உன்னை நான் பார்க்க
எதனில் பார்ப்பேன்

என்னை நான் தேட
உன்னையே கண்டேன்
உன்னை நான் தேட
எதனை கண்டடைவேன்

என் மொழி கேட்க
உன் மொழி கண்டேன்
உன் மொழி கேட்க
எதனை கேட்பேன்

என் நினைவுகளை தேட
உன் நினைவுகளை கண்டேன்
உன் நினைவுகளை
எதனில் தேடுவேன் நான்

மேலும்

மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 6:30 am

போர்த்தி பொத்திய அந்த
சேலை தலைப்பில்
புத்துயிரூட்டிப் பிறந்த - அந்த
புன்னகையில்....
இழந்து போன சொர்க்கம் தேடி..
இழப்பை மட்டும் ஈடுசெய்தபடி...

பார்வைகள் புறந்தள்ள...
பார்க்க மறந்த
பார்வைகளின் தேடலில்
எதனையோ தேடியபடி...

வானத்திற்கு தெரியாமல்
கிணற்றில் விழுந்த - அந்த
நிலவின் கனவு...
கண்களை மூடியபடி..
நீச்சங்களையும் நிதர்சனம் என்றபடி...

புதிதாக பூத்தமலர்...
புன்னகைத்தபடி
உதிரும் தருவாயில்..
உதிரத்தினை உதிர்த்தபடி - பல
மலர்கள்...

விடியாத இரவொன்றை
விடியலாக கொண்டே
விரையும் விட்டில் பூச்சிகள்
விடியலை காணும் நேரம்....?
விந்தை என்றுணர

எங்கோ தொலைந்த
அந்த ஞாயிரின் வெம

மேலும்

மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2019 11:14 pm

காந்தப் பார்வையால்
காதலை மட்டும் விதைத்து
காமத்தை துடைத்து...

தொலைபேசியில்
காதலுடன் பேசி
காதலை நட்பென்று
குடும்பத்தின் நலன் கருதி
ஏன் என்னை தொலைத்தாய்...?

தொலைத்த பின்னர்
தேடிய காதல்
தேடுதலாகவே தொலைந்துவிட ...

புதிய பறவையாக
புதுத் தென்றல் ஒன்று
புதிதாக பூத்திட
பூத்த மலருடன்
புரியாத வாழ்க்கை இன்று வரை
பூத்த மலர் உயிராகிவிட
தொலைந்து போன நீயல்லவோ
என் உயிராக...!

பிரிவின் துயர்
உன் விழிநீரின் வழியாக
புரிந்தும் புரியாமல் நான்..

இறப்பும் இறந்துவிடும்
உன் வார்த்தை கேளாமலே...
உன் மன ஆழத்தினை
உணர்ந்திட ஏனோ தவிக்கின்றேன்...
என் முடிவும் முடியுமுன்னே...

மேலும்

மனுவேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2019 6:44 pm

மழைநீரில் கரைந்த
கண்ணீர் துளி - என்
மன்னவன் விதைத்த
காதல் விதைகளோடு

உன் நேசம் பொய்யென்றால்
என் நேசம் நிஜமன்றோ...?
நினைவுகளை நெஞ்சில் சுமந்து
சுகங்களை நினைவுகளில் சுமந்தபடி

காலனின் நாட்காட்டியில்
காலச் சக்கரம் விரைவாக
வாழ்வெனும் வசந்தத்தில்
அரும்பு மலரும் தருணம்

மலராகியிருந்தால் கனியாகியிருப்பேன்
மொட்டாகவே மெட்டி அகற்ற முடியாமல்
பூத்திருந்த நாட்கள்
புன்னகைகாட்டி மறைந்திட்டதே

உன் வாசமுடன் வாழ்ந்திடுவேன்
உன் சுவாசம் என்னுடனே...

மேலும்

மனுவேந்தன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2019 8:56 pm

இரவுகளால் தீக்குளிக்கும்
இந்த சொற்களிலும்
நீதான் இருக்கிறாய்.
கவிதை என்ற பெயரில்...

வாசிக்கிறாயா என்பதை
வாழ்கிறாயா என்று கேட்பேன்.

சாலையில் பிரிந்த வலி
சாவில் பிரிந்த உடலென
என் மரணத்தில் நெளிகிறது.

உன் உடைந்த குரலில்
உயிர் முறிந்த ரணம்
இந்த இருளிலும் கேட்கிறது.

ஊமையான நாட்களிலும்
குளிர்ந்த மொபைலில்
உறைந்து தவிக்கும் மனம்.

உன் தனிமையில்
சிதறிய கண்ணீரெல்லாம்
காலத்தின் கொப்புளங்கள்.

என் தனிமையோ
தீயிட்டு எனையே தின்னும்
காதலின் உப்பளங்கள்.

நமக்கின்றி போன நாம்
இனி யாரோவெனதானா

நமக்குள்ளும் நாம்?

மேலும்

இதுவும் நன்றாகவே உள்ளது நண்பரே 12-May-2019 10:12 pm
மிக்க நன்றி ஐயா...தங்கள் கருத்தை ஏற்கிறேன். கடைசி வரிக்கு இந்த கவிதையை சுமந்து கொண்டு வந்தேன். 27-Apr-2019 11:29 pm
என் தனிமையோ தீயிட்டு எனையே தின்னும் காதலின் உப்பளங்கள். -----காதல் சோகம் அருமை 27-Apr-2019 3:59 pm
கனமான படிமங்கள் ஒன்றி வாசிப்பதற்குத் கொஞ்சம் தடை செய்கின்றன ...... நமக்கின்றி போன நாம் இனி யாரோவெனதானா ... என்ற கடைசி வரியில் தோற்ற காதலனும் ஜெயித்த கவிஞனும் தெரிகின்றனர் ..... 27-Apr-2019 3:03 pm
மனுவேந்தன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2019 6:24 am

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

O

இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட

மேலும்

தங்கள் வாசிப்பிற்கும் விமர்சனக் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி 05-May-2019 8:29 pm
இந்த உயிர்வேலி ஏன் அவ்வளவாக அழுத்தமாக சரித்திரத்தில் பதிவாக இல்லை என்பது ஆச்சரியம் . . ஆங்கிலேயரின் திட்டமிடல் மற்றம் நிறைவேற்றல் அவர்களின் தந்திர முகத்தை வெளிக்கொணருகிறது ... 04-May-2019 9:00 am
தங்கள் வாசிப்பிற்கும் விமர்சனக் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி 04-May-2019 5:15 am
நிறைய புதிய விஷயங்கள், மறக்கடிக்கப்பட்ட பார்வைகள்... இந்த பதிவு மிகச் சிறப்பாக இருந்தது. 03-May-2019 9:09 am
மனுவேந்தன் - மனுவேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2019 9:24 am

உன் வார்த்தைகளை
அந்த மின்னணு செய்தி
என்னிடம் சேர்ப்பித்தது...

ஒப்பனையற்ற வார்த்தைகளில்
ஒப்புதல் வாக்குமூலம்

கரம்பிடித்து நடந்த நாட்கள்
நகராமல் மனதில்

நித்திரை தொலைத்த நாட்கள்
நினைவுகளில் நீங்காமல்

நித்திரை தொலைத்து
எழுதியதின் பதிவாக
ஆங்காங்கே தேங்கி போன வார்த்தைகள்...

திரும்ப கேட்கின்றாய்
எதனை தந்துவிட...

உன் குறுமீசை குறுகுறுப்பில்
இதழ் பதித்த முத்தங்களையா...

தினம் தினம்
தீண்டிக் களித்த ஸ்பரிசங்களையா...

எப்படி அனுப்ப
இதே மின்னணு செய்தியிலா...
கடிதத்தில் பொட்டலமாகவா...?

மேலும்

மனமகிழ்வான நன்றிகள் 27-Apr-2019 10:51 pm
அருமையான கவிதை இது எழுத்து.காமில் போட்டு வை நெஞ்சத்தில் இட்டு பாதுகாத்து வை! 27-Apr-2019 9:06 pm
மனுவேந்தன் - மனுவேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2019 8:22 am

ஏதோ நினைக்கிறாய்
இதமாய் சுடுகிறாய்
இரவை இரசிக்கிறாய்
இன்பத்தை அளிக்கிறாய்

மெதுவாய் முளைக்கிறாய்
மேகம் கடக்கிறாய்
விண்மீன் தழுவுகிறாய்
விடியலில் கரைகிறாய்

கனவுகள் கொடுக்கிறாய்
காட்சிகள் தெளிக்கிறாய்
கருமேகம் மறைக்கிறாய்
கருப்பொருளாய் இருக்கிறாய்

கவிஞனை உயிர்பிக்கிறாய்
கவிதையை தருவிக்கிறாய்
வெட்கம் கொள்கிறாய்
வெறுமையாய் மறைகிறாய்

ஏக்கத்துடன் மெலிகிறாய்
தாகத்துடன் தளிர்க்கிறாய்
குளுமை கொடுக்கிறாய்
குழந்தைகளை மகிழ்விக்கிறாய்

காதலியாய் சுற்றுகிறாய்
காதலை தருகிறாய்
காலையில் மறைகிறாய்
மாலையில் உதிக்கின்றாய்

பெண்ணாக ஒளிர்கின்றாய்
வெண்மையாக சிரிக்கின்றாய்
நாணம் கொள

மேலும்

மனம்மகிழ்வான நன்றிகள் 04-Apr-2019 6:30 pm
அருமை அழகான நிலவு கவிதை எத்தனைப் பாடினாலும் நிலவின் அழகு வளர்ந்துகொண்டே போகும் adhu theindhu வளர்வது போல் 04-Apr-2019 11:14 am
மனுவேந்தன் - மனுவேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2019 8:28 pm

மீளா பதிவுகளில் இருந்து
மீண்டு வருகின்றேன்
வார்த்தைகளை தொலைத்துவிட்டு
வாசகங்களை தேடுகின்றேன்...

கடந்த காலம் கனவாய் கரைந்துவிட
நிகழ்காலம் நிலையில்லாமல் தள்ளாட
எதிர்காலம் ஏதோ ஒளிப்புள்ளியாய்...

காதலி அவள்தன்னை
கண்டு மீளவே
கண்கள் தான் ஏக்கமுடன்...

கனவுகள் கனவுகளாகவே
காதலி அவளும்
கண நேர கண்சிமிட்டலில்
காணாமலே போனாளே....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

செந்தில் லோகு

செந்தில் லோகு

திருநெல்வேலி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

இலங்கை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல்
மேலே