மீளா பதிவுகள்

மீளா பதிவுகளில் இருந்து
மீண்டு வருகின்றேன்
வார்த்தைகளை தொலைத்துவிட்டு
வாசகங்களை தேடுகின்றேன்...

கடந்த காலம் கனவாய் கரைந்துவிட
நிகழ்காலம் நிலையில்லாமல் தள்ளாட
எதிர்காலம் ஏதோ ஒளிப்புள்ளியாய்...

காதலி அவள்தன்னை
கண்டு மீளவே
கண்கள் தான் ஏக்கமுடன்...

கனவுகள் கனவுகளாகவே
காதலி அவளும்
கண நேர கண்சிமிட்டலில்
காணாமலே போனாளே....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (23-Jan-19, 8:28 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : meelaa pathivukal
பார்வை : 127

மேலே