விழிமூடா கனவுகள்

ஐந்து வீதிக்குள் அடங்கியிருந்தேன்
பசுமையை சுமந்திருந்தேன்
நீர்மேலாண்மை வைத்திருந்தேன்
வெள்ளந்தி மனிதர்களை சேமித்திருந்தேன்

மாற்றமென கூறி
நீர்வரத்தை அடைத்துப்புட்டான்...
பவிசான வாழ்க்கையென
பசுமையை அழித்துப்போட்டான்...

சேமித்த மனிதர்களையும்
சேவகம் செய்ய அழைத்துகிட்டான்....
நிர்கதியாக நிற்கவைத்து
மண்ணை மலடாக்கியது போல்
மனிதநேயம் மறந்துவிட்டான்...

நானும் தான் நிற்கின்றேன்
யாரேனும் வருவார்களே என
அந்த ஒத்தவீட்டு தனியாளப் போல...
யாருக்கேனும் தெரிந்ததுண்ணா...
கதோட சொல்லிடுங்க
அங்க உங்கள உருவாக்கின
வயதான பெற்றோரும்...
வழித்தடம் காட்டிய கிராமமும்
விழிமூடா கனவுகளுடன்
உங்களுக்காக காத்திருக்குன்னு...

சா.மனுவேந்தன்

எழுதியவர் : சா.மனுவேந்தன் (18-Feb-20, 10:13 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 420

மேலே