மழைத் துளி

மெல்ல உருண்டு
திரண்டு விழுந்தேன்
புறங்கையை உதறிச் செல்கின்றாள்
அவளுடைய கரங்களை
முத்தமிட்ட சந்தோஷத்தில்
மண்ணில் விழுந்து
மண்ணிற்குள் புதைந்தேன்
மறு பிறப்பிற்காக....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (21-Feb-20, 9:11 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : malaith thuli
பார்வை : 223

மேலே