சிவா அமுதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா அமுதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Jan-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  78

என்னைப் பற்றி...

பணி: பொறியாளர்
கவிதைகள் மூலம் மனம் நெகிழும் தருணங்களை வார்த்தைகளில் வடிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு!!

என் படைப்புகள்
சிவா அமுதன் செய்திகள்
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) sakthivel sivan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-May-2019 11:25 pm

பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் இழந்த ஒருவனுக்கு
சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.

ஆசை ஆசையாய்

யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்

கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாதும்
வழித்தெறிந்த ஒன்றாய் மட்டுமே இருக்கிறது எப்போதும்

எந்த பிழைப்பும்...

மேலும்

அருமை 21-Feb-2020 12:33 am
போற்றுதற்குரிய படைப்பு --------------------------------------- தங்கள் எண்ணங்களை வாழ்வியல் தத்துவங்களை படைத்தமைக்கு பாராட்டுக்கள் ------------- கவின்சாரலன்,மருத்துவர் கந்தன் , தமிழ்ச்செல்வி,வாசவன் ,ஷிபாதௌபீஃக் • அனைத்தும் படித்தேன் விமர்சனங்களை வரவேற்கிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 13-Jul-2019 8:02 pm
சிறப்பான கருத்து! கவிதை சிறப்பு! 17-May-2019 11:33 am
மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா 17-May-2019 9:35 am
Dr A S KANDHAN அளித்த படைப்பில் (public) sakkaraivasan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-May-2019 9:29 am

சுவரின் மேல் பாரம் -
தூணுக்குத்தான் வலி !

வண்டி வேகமாய் ஓடும் -
குதிரைக்குத் தான் மூச்சு இளைக்கும் !

உயரம் பார்த்து வளரும் மரம் -
பூமியை பிளந்து செல்லும் வேர் !

அவரவர் உபயோகம் -
அவரவர் விருப்பப்படி அல்ல !

மேலும்

உலக வாழ்வியல் மேலாண்மைக் கருத்துக்கள் சுவர் ---தூண் வண்டி-குதிரை வேர் ---மரம் கற்பனை நயம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 13-Jul-2019 7:54 pm
அருமை . வேர் புவியை பிளந்து ஓடினாலே மரம் தூண் வலியை தாங்கினாலே சுவர் பாரத்தை தாங்கும் குதிரை மூச்சிரைக்க ஓடினாள் தான் வண்டியும் ஓடும் ஆனால் அவரவர் உபயோகம் அவரவர்க்கு இல்லாது பிறர்க்கே உண்மை அருமையான தத்துவம் மருத்துவரே 05-Jun-2019 7:20 pm
மகிழ்ந்து கருத்திட்ட கவிப்பிரிய தமிழச்சி அவர்களுக்கு நன்றி .... 17-May-2019 11:39 am
உபயோகத்தின் சிறப்பை அழகாக உங்கள் கவிதையில் கூறியுள்ளீர்கள்! கவிதை மிகச் சிறப்பு!!! 17-May-2019 11:36 am
சிவா அமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2019 9:38 pm

மனம் கனத்த பொழுதினில்
ஜன்னல்வழி தெரியும் மரக்கிளையினில்
கீச்சென்று கிளை தாவும் அணில் குஞ்சொன்று

புழுக்கமான ஒரு நேரம்
சட்டென்று வந்து மோதி செல்லும்
ஏதோ ஒரு திசையிலிருந்து தென்றல் காற்று

ஒரு கொண்டாட்டத்தின் பந்தியில் என்
எச்சில் இலை எடுத்து போகிறாள்
அறிமுகமில்லா பெண்ணொருத்தி

துட்டுகளின் கணம் சேர்ந்த பாத்திரத்தை
கவிழ்த்துபோட்டு பெரும் பணம் கொடுத்த
முகத்தை தேடிப்பார்க்கிறான் பிச்சைகாரன்

முகநூல் பார்க்கையில் ஏதொவொரு
எண்ணை குறித்து கொண்டு
அவசரமாக ஓடுகிறான் குருதி கொடுக்க

அலையடித்து சென்றவன் உயிரை
அள்ளி கொண்டு வருகிறார்
அடுத்த கணம் நீரில் குதித்த மனித கடவுள்

காரணம் தெரியா விசையோட

மேலும்

சிவா அமுதன் - சிவா அமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2019 9:44 pm

காலத்தின் புரட்டலால்
தக்கையாகி போன
தள்ளாத வயது தம்பதியர்
கடற்கரையின் அலைகள்
எட்டாத விளிம்பில்
அமர்ந்திருக்கிறார்கள்...
இரைச்சலோடு கடந்துவிட்ட வாழ்க்கையில்
இனியென்ன பேச இருக்கிறதென
இடைவெளியை மௌனத்தால் நிரப்பிவிட்டு
மங்கலாய் தெரியும் கப்பல்களை நீண்ட நேரம்
பார்த்திருந்த தாத்தா பாட்டியிடம்
களைத்து திரும்புகிறார்கள் பேரப் பிள்ளைகள்...
போகலாமா என்று அவர்களுக்குள்
கேட்டுக்கொண்ட ஒற்றை சொல்
நீடித்திருந்த மௌனத்தை
உடைக்கிறது..
ஆர்ப்பரிப்போடு துள்ளி பாய்ந்து புறப்பட்ட நதிகள்
அடங்கி ஒடுங்கி அமைதியாக பயணிக்கின்றன
கடலில் கலப்பதற்கு...

மேலும்

மிக்க நன்றி டாக்டர்... 04-May-2019 7:21 pm
தங்கள் கருத்துக்கு நன்றி... 04-May-2019 7:21 pm
மிகவும் அருமையான படைப்பு..... 04-May-2019 4:08 pm
அருமை ..சரியான வார்த்தைகள் ..சரியான காட்சிப் பிடிப்பு ... உள்ளத்தில் நெருடும் கவித்துவம் .. நல்ல படைப்பு .. 03-May-2019 11:33 pm
சிவா அமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2019 9:44 pm

காலத்தின் புரட்டலால்
தக்கையாகி போன
தள்ளாத வயது தம்பதியர்
கடற்கரையின் அலைகள்
எட்டாத விளிம்பில்
அமர்ந்திருக்கிறார்கள்...
இரைச்சலோடு கடந்துவிட்ட வாழ்க்கையில்
இனியென்ன பேச இருக்கிறதென
இடைவெளியை மௌனத்தால் நிரப்பிவிட்டு
மங்கலாய் தெரியும் கப்பல்களை நீண்ட நேரம்
பார்த்திருந்த தாத்தா பாட்டியிடம்
களைத்து திரும்புகிறார்கள் பேரப் பிள்ளைகள்...
போகலாமா என்று அவர்களுக்குள்
கேட்டுக்கொண்ட ஒற்றை சொல்
நீடித்திருந்த மௌனத்தை
உடைக்கிறது..
ஆர்ப்பரிப்போடு துள்ளி பாய்ந்து புறப்பட்ட நதிகள்
அடங்கி ஒடுங்கி அமைதியாக பயணிக்கின்றன
கடலில் கலப்பதற்கு...

மேலும்

மிக்க நன்றி டாக்டர்... 04-May-2019 7:21 pm
தங்கள் கருத்துக்கு நன்றி... 04-May-2019 7:21 pm
மிகவும் அருமையான படைப்பு..... 04-May-2019 4:08 pm
அருமை ..சரியான வார்த்தைகள் ..சரியான காட்சிப் பிடிப்பு ... உள்ளத்தில் நெருடும் கவித்துவம் .. நல்ல படைப்பு .. 03-May-2019 11:33 pm
சிவா அமுதன் - சிவா அமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2019 9:20 pm

கல்யாணக்கிருஷ்ணா
எங்கிருக்கிறாய் நீ...
ஐந்தாம் வகுப்பில் ஒன்றாய் படித்து
ஆறாம் வகுப்பில் தொலைந்து போய்விட்டாய்...
பெரிய கண்களுமாய் படிய வாரிய
நீள் வட்ட முகத்தோடு
உன் அரை டவுசர் உருவம் இன்னமும்
ஞாபகம் இருக்கிறது ...

உன் பெயரை “கைனா” என்று அழைத்ததும்…
பள்ளியின் காலை நேர கடவுள் வாழ்த்துக்களில்
`நீ சுருண்டு விழுந்ததும்… உன் வீட்டுக்கு என்னை
அழைத்து செல்கையில் சிகப்பு புடவை
அணிந்திருந்த உனது அம்மா நமக்கு உணவிட்டதும்…
உனது வீட்டு வாசலில் ஒரு அழகான நாய்க்குட்டி இருந்ததும்…
என் ஞாபகங்களில் பத்திரமாக இருகின்றன...

நீ இன்றைய நாளில்
முகத்தோல் தடித்தோ தலை நரைத்தோ
காணப்படலாம்.

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! 27-Apr-2019 9:43 am
பழைய கல்யாணக்கிருஷ்ணனை உன்னிடமே சிலாகிக்க விருப்பம்... நல்ல வரிகள் ... 27-Apr-2019 1:42 am
சிவா அமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2019 9:20 pm

கல்யாணக்கிருஷ்ணா
எங்கிருக்கிறாய் நீ...
ஐந்தாம் வகுப்பில் ஒன்றாய் படித்து
ஆறாம் வகுப்பில் தொலைந்து போய்விட்டாய்...
பெரிய கண்களுமாய் படிய வாரிய
நீள் வட்ட முகத்தோடு
உன் அரை டவுசர் உருவம் இன்னமும்
ஞாபகம் இருக்கிறது ...

உன் பெயரை “கைனா” என்று அழைத்ததும்…
பள்ளியின் காலை நேர கடவுள் வாழ்த்துக்களில்
`நீ சுருண்டு விழுந்ததும்… உன் வீட்டுக்கு என்னை
அழைத்து செல்கையில் சிகப்பு புடவை
அணிந்திருந்த உனது அம்மா நமக்கு உணவிட்டதும்…
உனது வீட்டு வாசலில் ஒரு அழகான நாய்க்குட்டி இருந்ததும்…
என் ஞாபகங்களில் பத்திரமாக இருகின்றன...

நீ இன்றைய நாளில்
முகத்தோல் தடித்தோ தலை நரைத்தோ
காணப்படலாம்.

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! 27-Apr-2019 9:43 am
பழைய கல்யாணக்கிருஷ்ணனை உன்னிடமே சிலாகிக்க விருப்பம்... நல்ல வரிகள் ... 27-Apr-2019 1:42 am
சிவா அமுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 8:52 pm

நான்...
நாலு சுவற்று
சின்னஞ்சிறு
வீட்டின் குறுகிய
இடுக்கு!

நான்...
வானூர்தியை
அண்ணாந்து
பார்க்கும்
மிதிவண்டி!

நான்...
தேடும்
வேளையில்
கிடைக்காத
ஞாபக மறதி!

நான்...
தொண்ணுறு சதவீதம்
என்றும் எட்டாத
அறுபது
சதவீதம்!

நான்...
கூட்டத்தின்
பாராட்டு
கைத்தட்டலில்
ஒரு தட்டல்!

நான்...
அரசியல்வாதியின்
ஓட்டு வங்கியில்
ஒரு எண்ணிக்கை
ஓட்டு!

நான்...
நாட்காட்டியில்
புரண்டோடும்
விசேசம் ஏதுமில்லா
ஒரு நாள்!

நான்...
கல்லறை தோட்டத்தின்
மூலையில்
ஏதொவொரு
கல்லறை!

நான்
காலங்களின்
பக்கங்களில்
மறைந்துபோன
வெறுமை

மேலும்

மிக்க நன்றி கவின் சாரலன்.. 22-Apr-2019 3:28 pm
நன்றி டாக்டர் அவர்களே.. 22-Apr-2019 3:27 pm
அனைத்தும் அருமை பாராட்டுக்கள் 21-Apr-2019 7:16 pm
கவித்துவமான அமைப்பு . 20-Apr-2019 12:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

user photo

சுட்டித்தோழி சுபகலா

அம்பாசமுத்திரம்
Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே