நான் யாதெனில்

நான்...
நாலு சுவற்று
சின்னஞ்சிறு
வீட்டின் குறுகிய
இடுக்கு!

நான்...
வானூர்தியை
அண்ணாந்து
பார்க்கும்
மிதிவண்டி!

நான்...
தேடும்
வேளையில்
கிடைக்காத
ஞாபக மறதி!

நான்...
தொண்ணுறு சதவீதம்
என்றும் எட்டாத
அறுபது
சதவீதம்!

நான்...
கூட்டத்தின்
பாராட்டு
கைத்தட்டலில்
ஒரு தட்டல்!

நான்...
அரசியல்வாதியின்
ஓட்டு வங்கியில்
ஒரு எண்ணிக்கை
ஓட்டு!

நான்...
நாட்காட்டியில்
புரண்டோடும்
விசேசம் ஏதுமில்லா
ஒரு நாள்!

நான்...
கல்லறை தோட்டத்தின்
மூலையில்
ஏதொவொரு
கல்லறை!

நான்
காலங்களின்
பக்கங்களில்
மறைந்துபோன
வெறுமை

எழுதியவர் : சிவா. அமுதன் (19-Apr-19, 8:52 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
Tanglish : naan yaadhenil
பார்வை : 135

மேலே