நினைவுகள்

அந்த கடிதம் இன்றுதான் கிடைத்தது
அந்த கடித வரிகள்
மனதை ஏதோ செய்தது...
யாருக்காக எழுதப் பட்டிருக்கும்...
காலங்களில் கரைந்த
கண்ணீர் கவிதை இதுவோ....
முகவரி மாறிய கடிதம் இதுவோ....?
இல்லை இல்லை
முகவரி தொலைத்த கடிதமோ...?
இல்லை இல்லை
அனுப்ப மறந்த கடிதமோ...?
கேள்விகள் மட்டுமே

அந்தப் பரணில் அடைபட்ட
அழுக்கான புகைபடத்திலிருந்து
அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்...
நிம்மதி தொலைத்த நாட்களில்
நீ எழுதிய கண்ணீர் வரிகளை
நீரில் எழுதிவிட்டு
நினைவுகளை தொலைத்து விட்டாயோ என்று...?

அவளுக்காக எழுதியதோ
இக்கடிதங்கள்.....
பரணுக்குத்தான் வெளிச்சம்..

எழுதியவர் : சா.மனுவேந்தன் (20-Apr-19, 9:13 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : ninaivukal
பார்வை : 556

மேலே