வெற்றி வியூகம்

அரசன் ஆண்ட காலம் போதும் என்றும்
ஆளப்படுவோரும் ஆட்சியாளராக வேண்டும் என்றும்
ஆன்றோர்கள் அறிவித்தது அழகிய அரசியல்....

தன்னை ஆளும் தகுதி வாய்ந்த தலைவனை தானே
தேர்ந்தெடுக்க அமைக்கபட்ட வெற்றி வியூகம் தான் தேர்தல்....

அதற்கு ஆளும் திறனும் ஆட்சி அறமும்
அறிந்திருப்பதே அடிப்படை தகுதியாக்கபட்டது
அதில் சாமானியரின் பங்கும் உண்டு....


அரசகுலமோ ஆளப்படும் குலமோ
ஆட்டநாயகனின் குலமோ அடிமைவர்கத்தின் குலமோ
வாக்களிக்கும் உரிமை இங்கு யாவருக்கும் ஒன்றே.....

இது தனி மனிதன் விளையாடும் கண்கட்டு விளையாட்டு அல்ல
5 ஆண்டு கால இடைவெளியில்
புது சமுதாயம் விதைத்து அறுவடை செய்ய
மக்களால் மக்களில் ஒருவருக்கு அளிக்கபடும்
மாபெரும் வாய்ப்பு....

தலைவனாக்கும் வலிமை மட்டும் அல்ல
தகுதி இழக்க செய்யும் ஆற்றலும் மக்களுக்கு உண்டு....

இங்கு மாற்றப்படவேண்டியது
தலைவனாகும் மனிதனின் மன நெறிகளே
தேர்தல் முறை அல்ல......

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (20-Apr-19, 11:22 am)
Tanglish : vettri viyuukam
பார்வை : 101

மேலே