ஸ்டெல்லா ஜெய் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஸ்டெல்லா ஜெய் |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 06-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 628 |
புள்ளி | : 43 |
தமிழ் கவிதையின் ரசிகை.....
நம் முகம் மலரும்படி பேசும்
பலர் நம்முடன் இருக்கலாம்
ஆனால்
நம்மை இகழ்வோர் முன்
என் நண்பன் அப்படிபட்டவன் அல்ல
என கூறும் தோழன் ஒருவன்
கிடைத்தாலே போதும்
வாழும் இடத்திலே சொர்க்கம் படைக்கலாம்...
சிறந்த நண்பனை இழந்தவனே
மட்டுமே நட்பின் வலிமையை அறிவான்...
சிறந்த நட்பை விட்டு பிரிந்து
சென்றவன் மட்டுமே பிரிவின் வலியை அறிவான் ...
முதுகில் குத்துப்பட்டவன் மட்டுமே
துரோகத்தின் வேதனையை அறிவான்...
நண்பன் மாறலாம்
நட்பின் மாண்பு மாறாது....
சிறந்த நண்பன்
யார் என்றால்
நம் தனிமையை
நாம் சொல்லும் முன்னரே
நமது கண்ணாடி பிம்பம் போல்
நம்மோடு
நமக்கு பின் பலமாக
நமக்காக நிற்பவனே...
என்னோடு
நட்பில் இணைந்து
நட்புடன் வளர்ந்து
நட்பு உறவில் வாழும்
என் நட்பு அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
எல்லாம் நலமாம்
நம் பார்க்கும் விதம்
யாவையும்
நலமெனில்...
எவற்றிலும் குறையாம்
நம் பார்க்கும்
யாவிலும் குறை
கூறுகையில்....
நன்றே காண்போம்
இனிதே வாழ்வோம்
எவையும் கடந்து சென்றால்
தானே வாழ்வும்
நினைவலைகளோடு
நிறைந்திருக்க கூடும்....
எனது வார்த்தைகளை விட
என் அமைதியே உனக்கு
விருப்பமானது என்றால்
மௌனமே என் காதல்
மொழியென
ஏற்றுக் கொள்வேன்....
என் அன்பே...
பகலையும் இரவையும் மறக்கவும் செய்யும்
அகமும் புறமும் திகைக்கவும் செய்யும்
அன்னமும் தண்ணியும் துறக்கவும் செய்யும்
அன்னையையும் அந்நியமாக நினைக்கவும் செய்யும்
எல்லாம் அவன் மட்டும் தான் என எண்ணவும் செய்யும்
ஒரு வினோதமான விந்தை தான் காதல்....
அதை அடியோடு வேறுபவரும் இல்லை...
அறவே வேண்டாம் என்று விலகுபவரும் இல்லை....
காதல் அனுபவம் பெறாதவரும் இங்கு இல்லை....
அந்த வினோத விந்தையோ பலவிதம்...
சிலருக்குகோ சொல்லாததாக...
சிலருக்குகோ சொர்க்கமாக...
சிலருக்குகோ சொந்தமாக...
சிலருக்குகோ சோகமாக.....
தகுந்தவர்கள் இணைந்து
ஆளும்
தகுதி வாய்ந்த தலைவனை
தகுந்த நேரத்தில்
தட்டி கொடுத்து
தெளிவுற செய்யும்
தேர்வு தான்
தேர்தல்....
அதன் அடையாளமான
கரும்புள்ளி
விழ வேண்டியது
சுட்டு விரலின் மீது மட்டுமே
தகுதி பெறும்
தலைமை மீது அல்ல....
தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா ?
இந்திய ஊடகங்கள் தமிழனை மதிப்பதில்லையே ஏன் ?
கவிதை கதை கட்டுரை எழுதலாம்
இயற்கை எழிலின் ஆட்சியை கலைத்து
காலம் தந்த அறவியல் இன்று ஆள தொடங்கிவிட்டது.....
தென்றல் அன்னை அளித்த இனிய இதத்தை
இன்று மின்விசிறி அளவு கடந்து அளித்து ஆட்டி வைக்கின்றது.....
இன்ப நிலவு கொடுத்த ஒளியை
மின்னிழை விளகின் ஒளிக்கற்றை மிஞ்சிவிட்டது.....
இனிமையாக இசை மொழி பேசும் புள்ளினங்கள் யாவும் இங்கே ஆண்ராய்டு அலைபேசி அதிர்வெண் ஆதிக்கத்தில் அறவே மறைந்துவிட்டது......
இறுதியில் பொய்தது என்னவோ பருவம் மாறிவரும் மாரி என்கின்றோம்......
யாரும் அறிவியல் வளர்ச்சி வேண்டாம் என கூறவில்லை இயற்கையோடு இணைந்த வளர்ச்சிகே முயற்சிக்க வேண்டுகிறோம்.....
தகுந்தவர்கள் இணைந்து
ஆளும்
தகுதி வாய்ந்த தலைவனை
தகுந்த நேரத்தில்
தட்டி கொடுத்து
தெளிவுற செய்யும்
தேர்வு தான்
தேர்தல்....
அதன் அடையாளமான
கரும்புள்ளி
விழ வேண்டியது
சுட்டு விரலின் மீது மட்டுமே
தகுதி பெறும்
தலைமை மீது அல்ல....