மா - ற்- றியது யார்

இயற்கை எழிலின் ஆட்சியை கலைத்து
காலம் தந்த அறவியல் இன்று ஆள தொடங்கிவிட்டது.....
தென்றல் அன்னை அளித்த இனிய இதத்தை
இன்று மின்விசிறி அளவு கடந்து அளித்து ஆட்டி வைக்கின்றது.....
இன்ப நிலவு கொடுத்த ஒளியை
மின்னிழை விளகின் ஒளிக்கற்றை மிஞ்சிவிட்டது.....
இனிமையாக இசை மொழி பேசும் புள்ளினங்கள் யாவும் இங்கே ஆண்ராய்டு அலைபேசி அதிர்வெண் ஆதிக்கத்தில் அறவே மறைந்துவிட்டது......
இறுதியில் பொய்தது என்னவோ பருவம் மாறிவரும் மாரி என்கின்றோம்......
யாரும் அறிவியல் வளர்ச்சி வேண்டாம் என கூறவில்லை இயற்கையோடு இணைந்த வளர்ச்சிகே முயற்சிக்க வேண்டுகிறோம்.....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (21-Apr-19, 1:13 pm)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : maatriyathu yaar
பார்வை : 100

மேலே