மழையே வா

மழையே வா....

மழையே எங்கு சென்றாய்
எங்கு சென்று மறைந்தாய்
அல்லது எங்களை மறந்து விட்டாயா

மானுடம் செய்யும் தவறால்
கோபம் கொண்டு
கண் காணாத இடத்துக்கு சென்று விட்டாயோ

சுயநலம் கண்களை மறைத்து
மரங்களை வெட்டிப் சாய்த்தான்
காடுகளை கனிசமான முறையில் அழித்தான்
மணல் கொள்ளை அடித்தான்
நிலத்தடி நீரை பச்சாதாபம் இன்றி உரிஞ்சினான்

மறுக்க முடியாத தவறு தான்
மண்ணிக் இயலாத குற்றம் தான்
மனிதன் உனக்கு இழைத்த துரோகம்

அத்துனைக்கும் அளவில்லா ஆசையே காரணம்
பேராசை பெரு நஷ்டம்
என உணர்ந்தான்
கொஞ்சம் உன் கோபத்தை மழையாய் பெய்து தனித்து கொள்
மழையே ஏன் சிரிக்கின்றாய்
திருந்தாதா இந்த மானுட இனம் என்று தானே
உன் கோபத்தை கூட அதன் சுயநலத்திற்காக
உன்னை மழையாய் பொழிய போலியாய் அழைக்கிறது என்று தானே.

அவ்வளவே மனித அறிவு
வந்த வழி அப்படி
அற்ப மானுடம் தானே
மழையாய் பொழிந்து
மன்னித்து விடு
வெள்ளமென வந்து
வஞ்சித்து விடு
ஆனால் நிச்சயம் வந்து விடு
இல்லையேல் மானுடம் முழுவதும் அழிந்துவிடும்
சரி, இன்றே கோடை மழையாய்
அடித்து துவம்சம் செய்வாயா.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Apr-19, 3:21 pm)
சேர்த்தது : balu
Tanglish : mazhaiyae vaa
பார்வை : 1733

மேலே