காதல் வினோதம்
பகலையும் இரவையும் மறக்கவும் செய்யும்
அகமும் புறமும் திகைக்கவும் செய்யும்
அன்னமும் தண்ணியும் துறக்கவும் செய்யும்
அன்னையையும் அந்நியமாக நினைக்கவும் செய்யும்
எல்லாம் அவன் மட்டும் தான் என எண்ணவும் செய்யும்
ஒரு வினோதமான விந்தை தான் காதல்....
அதை அடியோடு வேறுபவரும் இல்லை...
அறவே வேண்டாம் என்று விலகுபவரும் இல்லை....
காதல் அனுபவம் பெறாதவரும் இங்கு இல்லை....
அந்த வினோத விந்தையோ பலவிதம்...
சிலருக்குகோ சொல்லாததாக...
சிலருக்குகோ சொர்க்கமாக...
சிலருக்குகோ சொந்தமாக...
சிலருக்குகோ சோகமாக.....