காலத்தின் பக்கங்கள்

காலத்தின் புரட்டலால்
தக்கையாகி போன
தள்ளாத வயது தம்பதியர்
கடற்கரையின் அலைகள்
எட்டாத விளிம்பில்
அமர்ந்திருக்கிறார்கள்...
இரைச்சலோடு கடந்துவிட்ட வாழ்க்கையில்
இனியென்ன பேச இருக்கிறதென
இடைவெளியை மௌனத்தால் நிரப்பிவிட்டு
மங்கலாய் தெரியும் கப்பல்களை நீண்ட நேரம்
பார்த்திருந்த தாத்தா பாட்டியிடம்
களைத்து திரும்புகிறார்கள் பேரப் பிள்ளைகள்...
போகலாமா என்று அவர்களுக்குள்
கேட்டுக்கொண்ட ஒற்றை சொல்
நீடித்திருந்த மௌனத்தை
உடைக்கிறது..
ஆர்ப்பரிப்போடு துள்ளி பாய்ந்து புறப்பட்ட நதிகள்
அடங்கி ஒடுங்கி அமைதியாக பயணிக்கின்றன
கடலில் கலப்பதற்கு...

எழுதியவர் : சிவா. அமுதன் (3-May-19, 9:44 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 401

மேலே