வாழ்க்கை

பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் இழந்த ஒருவனுக்கு
சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.

ஆசை ஆசையாய்

யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்

கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாதும்
வழித்தெறிந்த ஒன்றாய் மட்டுமே இருக்கிறது எப்போதும்

எந்த பிழைப்பும்...

எழுதியவர் : ஸ்பரிசன் (15-May-19, 11:25 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : vaazhkkai
பார்வை : 135

மேலே