பதுக்கி வைத்தான்

அள்ளிப் பருகிடவே
அழகை

அங்கங்கே தெளித்து
வைத்தான்

ரசித்திட கண்கள்
இரண்டு

போதுமென இறுக்கி
வைத்தான்

பெண்களின் அழகை
அங்கங்களில்

அங்கங்கே பதுக்கி
வைத்தான்

அடக்கமுடியா ஆசையை
வளரவைத்தான்

வளர்ந்துவிட்ட ஆசையில்
தவிக்க வைத்தான்

படைத்துவைத்து அவனும்
தூங்கிவிட்டான்

நம்தூக்கத்தை மட்டும்
கெடுத்துவிட்டான்..,

எழுதியவர் : நா.சேகர் (15-May-19, 9:47 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pathukki vaithan
பார்வை : 119
மேலே