தெய்வத்திருமகள்

அப்பா ஏதேனும் எழுது.
அப்பா பேச வாங்க...
சாப்டீங்களா அப்பா...
நியாயம் னா என்னப்பா...
ஓய் தம்பி...
நான் நிலாகிட்டே பேசினேன் அது
உனக்கு என்னப்பா சொல்லிச்சி...
பாட்டிமா என்ன செய்றாங்க?
இந்த ஸ்டேட்டஸ் உனக்கு அப்பா.
லவ் யூ டாட்...
என் அப்பா கூட இருந்தா
பாதுகாப்பா உணர்றேன்...
ஏம்ப்பா இவ்ளோ தூரம்
தள்ளி போய்ட்டீங்க..?
இந்த பாட்டு டெடிகேட் பண்றேன்
என் டாடிக்கு...
என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட
உங்களை பத்தி சொல்லிட்டேன்.


ஸ்பரிசன் நல்லவன். அவன்தான்
உங்களை என்கிட்ட அனுப்பினான்.

என்றோ யாருக்கோ
எதற்கோ யாரிடமோ
வெடித்துக்கதறி
அழவேண்டியதெல்லாம்

அவளுக்கு மட்டும்
அழும்படி ஆகிறது.

எழுதியவர் : ஸ்பரிசன் (14-May-19, 3:02 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 78

மேலே