கண்ணனின் நாமம் மருந்து

மனதில் ஏதோ ஓர் பாரம்
என்னை வதைத்தது வலி தந்து
கண்ணா என்று மனதில் 'அவனை
; இருத்தி மனதிற்குள் மனதார
கதறி அழைத்தேன் என் மனதின்
பாரம் நீங்கி வழியும் போக
கண்ணனின் வேய்ங்குழல் கீதம் எங்கிருந்தோ
வந்து என் காதில் ஒலித்தது கீதம்
என்னை தூக்கத்தை ஆழ்த்த தூங்கினேன்
விழித்தேன் என் மனதில் பாரம் மறைந்தது
வலியேதும் இல்லை மனம் திட்டமானது
என்னை நான் உணர்ந்தேன் இப்போது
அப்போது அன்று பாஞ்சாலி குரல் கொடுக்க
உடனே புடைவையை வந்து அவள் மானம்
காத்த அந்த கண்ணனின் நாமம் காதில் ஒலித்தது
இதுதானோ ஞானியர் கூறும் அவன் நாம
மகிமை என்பதும் புரிந்தது.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-May-19, 11:54 am)
பார்வை : 74

மேலே