மணங்கான உடல் மீது

மிருகங்கள் பறவைகள்
மேன்மையான பூச்சினங்கள்
அருகு முதல் ஆல் வரை
அழகழகான ஆரண்யங்கள்

எல்லாம் எந்நாளும்
தம் உடலைப் பேணி
தமக்கென்ற தனி நிலையில்
தரணி எங்கும் வாழ்கின்றன

உண்ண உணவு முதல்
உழலும் எவ்வினத்தையும்
களவாடி பயன்படுத்தும்
ஈன மாந்தர் கூட்டம் எவ்வகையில் உயர்வு ?

நீரின்றி போனாலே
உன்னுடல் துர்நாற்றங்காணும்
மணங்கான உடல் மீது
யாதேனும் மண்னைத்தான் பூச வேண்டும்.

தன் உடல் கூறைக் கொண்டு
ஒருவாறு பேதம் கண்டு
உலக மாந்தருக்கு பெயரைக் கண்ட
விவகாரக் கூட்டமே மனிதக் கூட்டம்.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-May-19, 10:03 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 50

மேலே