தேன் கலந்த நஞ்சு

தேர்தல் என்ற ஒரு தேன் கலந்த நஞ்சு ஒன்றை
தெளிவாய் ஆக்கி வைத்து திடத்தன்மை கொடுத்தது
அரசியல் சாசனம் எனும் அட்சயப் பாத்திரமே

ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஊரே கூட வேண்டும்
உன்னுடைய வாக்கையே மறைவாய் இட வேண்டும்
இறையாண்மை மிக்கவராய் தேர்ந்தவர் நடக்கணும்

தேர்ந்தவர் தவறாக எச்செயல் செய்யிணும்
தேர்ந்தெடுத்த நீ அவரின் செய்கையை கேட்கலாமோ
கட்டி வைத்த சட்டமதில் கருத்துகள் ஏதுமில்லை

கோடிபேர் தேர்ந்தெடுத்த சிலநூறு பேர் மன்றம்சென்று
கேடான செய்கைகளை கோடி பேருக்கு எதிராக
கால்கோல் செய்ய துணிகையில் தேர்தெடுத்தோர் நிலை?

தேர்வு செய்ய சாவி இங்கு பல கோடி மக்களிடம்
தேர்வு பெற்றோரை காப்பதுக்கு சில பத்து பேரா?
தேடித் தேடி பார்த்தேன் தீர்வு எனக்குத் தெரியவில்லை.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-May-19, 9:31 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38

மேலே